பஸ் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கண்டக்டர்களுக்கு வார்னிங்.. தமிழக போக்குவரத்து துறை அதிரடி..!
கண்டக்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது போக்குவரத்து துறை
சென்னை: பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் மனம் குளிரும்படியான முக்கிய உத்தரவு ஒன்றை, போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது..!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே திடீரென தொற்று அதிகரித்து காணப்படுகிறது.. அதனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பானது, கடந்த சில நாட்களாகவே 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

சூப்பர் உத்தரவு
இந்நிலையில், பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதால், அவர்களின் பாதுகாப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. அதனால், போக்குவரத்து துறைக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.. குறிப்பாக, கண்டக்டர்களுக்கு ஒரு மெகா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, டிக்கெட் தரும்போது, சில கண்டக்டர்கள் எச்சில் தொட்டு வழங்குவதாக புகார்கள் வந்துள்ளதாம்.. இதற்குதான் செக் வைத்துள்ளது அரசு.

எச்சில்
பெரும்பாலும் பஸ்களில் கண்டக்டர்கள் டிக்கெட் தரும்போது, எச்சிலை தொட்டுதான் அந்த டிக்கெட்டை வழங்க நேரிடுகிறது.. சிறிய துண்டு போல இருக்கும் அந்த டிக்கெட்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், அதை பிரித்தெடுக்க இவ்வாறு எச்சிலை பயன்படுத்துவதை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள்.. இது பொதுமக்கள் பலருக்கு அருவெருப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது.. அதனால்தான், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

டிக்கெட்டுகள்
அதில், "மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர் பயணச்சீட்டு வழங்கும் பொழுது பயணச்சீட்டு கட்டிலிருந்து பயணச்சீட்டை எடுக்கும் பொழுது பயணச்சீட்டுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருப்பதால் பிரித்து எடுக்க ஒரு சில நடத்துநர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை எடுத்து பயணிகளுக்கு கொடுப்பதால் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படுகிறது.

மன உளைச்சல்
1. எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் பயணிகள் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது மிகுந்த மனஉளைச்சலுடன் பெற்றுக்கொள்கின்றனர். 2. எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் சுகாதார கேடு விளைவிக்கும் என்பதால் முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் நடத்துனர்கள் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பொழுது தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை (Sponge) பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பான்ஞ்
எனவே, அனைத்து நடத்துனர்களுக்கும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதை முற்றிலும் தவிர்க்க தக்க அறிவுரைகள் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் உறிஞ்சும் ஸ்பான்சை ஏற்பாடு செய்து நடத்துனர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications