திமிறிய எடப்பாடி.. அதே நாள் + அதே மாதிரி.. "அடிக்கிற காற்றில் அம்மி பறக்குதா".. சம்பவம் இருக்கு போல
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வடமாவட்டங்களில் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த போகிறாராம்
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பில், மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்க போவதாக கூறப்படுகிறது.. இந்த ஸ்பெஷல் செய்தியை, நம் "ஒன்இந்தியா தமிழுக்காக" தெரிவித்துள்ளார் அதிமுக சீனியர் தலைவர் வைகைச்செல்வன்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு, குஷியில் இருந்தாலும், தற்சமயம் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறார். சட்டரீதியான விவகாரங்களில் இனி கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
மற்றொருபக்கம் கட்சி ரீதியான சில விஷயங்களையும் முன்னெடுத்துள்ளார்.. அந்தவகையில், தமிழகம் முழுவதும் தங்களுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, துரிதப்படுத்தி வருகிறார்..

1 + ஐடியா
2வதாக, புதிய நிர்வாகிகளை விரைவாக நியமிப்பதுடன், மாவட்ட வாரியாக ஓபிஎஸ் சுற்றுப்பயணமும் செல்ல திட்டமிட்டுள்ளார்... 3வதாக, வரும் 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மாநாடு நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். 4வதாக, தன்னுடைய சுற்றுப்பயணத்தில், முக்கிய ஆதரவாளர்கள், நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 2000 பேரையாவது நேரில் சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.. 5வதாக, தன்னுடைய பலத்தை வடமாவட்டங்களில் காட்ட போகிறாராம்.. இதற்காக சென்னை அல்லது காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுக்க போவதாகவும் தெரிகிறது.

சென்ட்டிமென்ட்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த 2014 எம்பி தேர்தல் பிரச்சாரத்தை, வடமாவட்டமான காஞ்சிபுரத்திலிருந்து தான் தொடங்கினார்... அதே ரூட்டை பிடித்தால், தனக்கும் சென்ட்டிமென்ட்டாக இருக்கும் என்று ஓபிஎஸ் கணக்கு போடுவதாகவும், இப்படி நடத்தப்படும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு, சசிகலா, டிடிவி தினகரனை அழைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.. இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடி தரப்பும் இப்படி பிளானை போட்டு வருகிறது..

வைகைச்செல்வன்
அதிமுகவின் மூத்த தலைவர் வைகைச்செல்வன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. ஓபிஎஸ் மீண்டும் வந்தால் அவரை கட்சியில் இணைத்து கொள்வீர்களா? சசிகலா, டிடிவி அதிமுக திரும்பினால் உங்கள் நிலைப்பாடு என்ன? ஒற்றை தலைமை விவகாரத்தினால் சோர்ந்து போயுள்ள தொண்டர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? என்பன உட்பட பல கேள்விகள் அவரிடம் நாம் எழுப்பினோம்.. அதற்கு வைகைச் செல்வன் சொன்ன பதில்களின் சுருக்கம்தான் இது:

சீனியர்கள்
ஓபிஎஸ்ஸை மறுபடியும் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் மூத்த தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.. ஆனால், அதிமுக அலுவலகத்துக்கு அன்று வந்த ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் ஆபீஸை அடித்து நொறுக்கி, அந்த அலுவலகத்தின் புனிதத்தையே கெடுத்துவிட்டார்.. அதனால், அவரை கட்சிக்குள் சேர்ப்பதா இல்லையா என்று கட்சி மூத்த தலைவர்கள்தான முடிவு செய்வார்கள்.. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

அம்மி நகரும்
ஆனால், தொண்டர்கள் யாரும் பிரிந்து செல்லவில்லையே.. எல்லாரும் ஒரே கட்சியில்தானே இருக்கிறோம்.. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்ற ஒருசிலர் மட்டும்தான் தனியாக சென்றுள்ளார்கள்.. அடிக்கிற காற்றில் அம்மியும் பறந்துவிடும்.. அதைப்போல, அதிமுக அலுவலகம் யாரிடம் இருக்கிறதோ, சின்னம் யாரிடம் இருக்கிறதோ, கொடி யாரிடம் இருக்கிறதோ, தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களா, கட்சியும் அப்படித்தான் நகரும்..

வெற்றிடம்
அதுதான் தகுதியுள்ளது தப்பி பிழைக்கும், வெற்றிடத்தை காற்று நிரப்பும்.. அவர்களை இணைப்பது குறித்தும் பொதுச்செயலாளர்தான முடிவெடுக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா 114 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஒரு வார கால தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.. அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.. இந்த பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.. தொண்டர்களுக்கு நிச்சயம் ஒரு எழுச்சி ஏற்படும் என்றார் வைகைச்செல்வன்.

பிளான் சேஞ்ச்
ஏற்கனவே ஓபிஎஸ் வடமாவட்டத்தை குறி வைத்து மாநாடு நடத்த உள்ளார்.. அதுமட்டுமல்ல, இந்த கூட்டம் முதலில் கோவையில் நடப்பதாக இருந்தது.. ஆனால், எடப்பாடிக்கு ஆதரவு கோவையில் அதிகமாக இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் மாநாடு நடத்தினால், கூட்டம் சேராது என்ற கணக்கை போட்டு, செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்துக்கு நிகழ்ச்சியின் பிளான், ஷிப்ட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.. ஒருவேளை இதன்மூலம் ஓபிஎஸ் மீதான செல்வாக்கு கூடுமா? அல்லது எடப்பாடி மேற்கொள்ள போகும் செல்வாக்கை கூட்டுமா? தெரியவில்லை.. 15-ம்தேதிக்கு மேல் தெரியவரும்.. பார்ப்போம்..!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications