சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பூனைக்கு மணி".. தட்டித்தூக்கும் அன்புமணி.. இதுல இவ்ளோ இருக்கா? திமுக மேஜிக் காய்நகர்த்தல்: ஹாட் களம்

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகின்றனவாம்

Google Oneindia Tamil News

சென்னை: அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, பாமக புதுப்பொலிவுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.. கட்சியின் அஸ்திவாரங்கள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வரும்நிலையில், பாமக குறித்த சில தகவல்களும் அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன..

கடந்த 2012ல், வன்னியர் சங்க இளைஞர் மாநாடு சித்திர பௌர்ணமி அன்று பாமக சார்பில் நடைபெற்றது.. அந்த நேரத்தில், மரக்காணம் பகுதியில், அம்மாநாட்டுக்கு கலந்து கொள்ள வந்தவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக வெடித்தது..

அதில் பாமகவின் 2 பேர் உயிரிழந்தனர்... அதனால், அதற்கு அடுத்தவருடம் அதாவது கடந்த 2013-ல் விழா நடத்த காஞ்சிபுரம் போலீஸ் அனுமதி தரவில்லை..

கொடுத்து வைத்தவர்கள்.. இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர்.. பாமக அன்புமணி தாக்கு கொடுத்து வைத்தவர்கள்.. இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர்.. பாமக அன்புமணி தாக்கு

 பாய்ச்சல் ரத்தம்

பாய்ச்சல் ரத்தம்

அதேபோல, 2014-லிலும், தேர்தல் நடத்தை விதிகளை உருவாக்கி, அப்போதும் விழா நடத்த அனுமதி அளிக்கவில்லை.. அதனால், 2015-ம் ஆண்டு முதலே, வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாட்டை பாமக கைவிட்டது.. ஆனால், அதற்கு பதிலாக, மண்டல மாநாடுகளை நடத்தியிருந்தது.. 2017-ல் ' சமூக நீதி மாநாட்டையும் நடத்தியிருந்தது. இந்நிலையில், கட்சிக்கு அன்புமணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.. இதனால் பாமகவுக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, பல்வேறு அதிரடிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்..

 சபாஷ் அன்புமணி

சபாஷ் அன்புமணி

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, பாமகவின் அடித்தளத்தையே மேலும் வலுவாக்கி வருகிறார்.. இதற்காகவே, 2.0 என்ற திட்டத்தையும் கையிலெடுத்து வருவதுடன், 2026ல் பாமக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் வெளிப்படையாகவே பறைசாற்றி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், வன்னியர் சங்க மாநாட்டை நடத்த வேண்டும் என்று பாமக தொண்டர்கள், அன்புமணியிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு திருநாள் நடத்த பாமக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது..

 முணுமுணுப்புகள்

முணுமுணுப்புகள்

கடந்த ஒரு மாத காலமாகவே இதற்கான முணுமுணுப்புகள் எழுந்தபடியே வந்தாலும், தற்போது அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் பாமக ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 இடங்களை தேர்வு செய்து, பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டதாகவும்கூட கிசுகிசுக்கள் வந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த இடத்தை அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.. அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு சென்ற போட்டோக்களும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன...

 எகிறிய டவுட்

எகிறிய டவுட்

பாமக சார்பில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிப்படையாக வரவில்லை என்றாலும், சித்திரை முழு நிலவு மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக சொல்கிறார்கள்.. அநேகமாக மே 06ம் தேதி மாநாடு நடக்கலாம் என்றும் உத்தேசமாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஒப்புதல் தருமா? தராதா? என்ற சந்தேகமும் ஓடிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, நமக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதாவது, தமிழக சட்டமன்றத்தில், முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சம்பவங்கள் பற்றி லிஸ்ட் போட்டு பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்..

சூட்சுமம்

சூட்சுமம்

அதில், பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்ட அவர், வன்னியர் சங்க மாநாட்டை தொடர்ந்து எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையில், நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் என்றும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.. எனினும், இதற்கு பாமக உறுப்பினர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. எனினும் 'வன்னியர்' என குறிப்பிட்டதை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாமே, அதற்கு பதிலாக "ஒரு குறிப்பிட்ட" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாமே என்று சில வன்னியர் சங்க தலைவர்கள் மட்டும் ஆதங்கமாக சொன்னாலும், பாமக எதிர்ப்பை காட்டவில்லை..

 திருமாவளவன்

திருமாவளவன்

வழக்கமாக, இப்படி ஒரு வார்த்தையை திமுக தரப்பு சொன்னதற்கு, பாமக நிச்சயம் எதிர்த்திருக்கும். ஆனால், இப்போது சட்டமன்றத்தில் பாமக எதிர்க்கவில்லை... அதாவது, திமுக கூட்டணிக்குள் நுழைவதற்கும், மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா பொதுக்கூட்டம் நடத்தவும் பாமக திட்டமிடுகிறது.. இந்த பொதுக்கூட்டத்தை நடத்த திமுக அரசு அனுமதிக்காது என்பதை உணர்த்தவே, "இதே பொதுக்கூட்டம் நடந்தபோதுதான் வன்முறை வெடித்தது" என்பதை முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.. ஆனால், ஒரு சமூகத்தை சித்தரிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அப்படி குறிப்பிடவில்லை என்றது தமிழக அரசின் உள்துறை வட்டாரம்...

 கிட்ட கிட்ட

கிட்ட கிட்ட

அதேபோல, மற்றொரு தகவலும் கசிந்து வருகிறது.. நடக்க போகும் இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டது.. இதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்த தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் உள்ளனவாம்.. அந்த வாக்குகளை, தன் பக்கம் திருப்பவே பாமகவை "யாருக்கும் ஆதரவில்லை" என்ற நிலைப்பாட்டை திமுக எடுக்க வைத்ததாம்.. திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர், இதன் பின்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள்..

 பச்சை சிக்னல்

பச்சை சிக்னல்

அதுமட்டுமல்ல ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. திமுக கூட்டணியில் பாமக இடம் பெற போகிறதா? சித்திரை திருவிழா நடத்தப்படுமா? அதற்கு தமிழக அரசு அனுமதி தரப்போகிறதா? என்றெல்லாம் பல்வேறு எதிர்பார்ப்புகள் எகிறி வரும்நிலையில், நடந்து கொண்டிருப்பதை எல்லாம் பார்த்தால், பாமக, திமுக பக்கம் நெருங்கி கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

English summary
Master stroke by Anbumani Ramadoss and Can PMK form an alliance with DMK in MP election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X