Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி கைது.. மாஸ்டர் மைண்டை பார்த்த ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் அசத்துபவராச்சே! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக எம்பி வழக்கறிஞர் வில்சன் உடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் 17 மணி நேரம் நடந்த ரெய்டுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Mastermind: Why did CM Stalin meeting DMK MP Wilson after the arrest of Minister V Senthil Balaji?

அவரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை. அவரை சட்டப்படி கைது செய்து இருக்கிறீர்களா? கைது செய்யப்பட்டது முறையாக நடந்துள்ளதா? செந்தில் பாலாஜி கைதை ஏன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லைனு.

அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றால் உடனடியாக உடல்நிலையை காரணம் காட்டி பெயில் வழங்க வேண்டும் என்று என்று திமுக சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

எம்பி வில்சன்; இதற்காக முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பி வில்சன் உடன் ஆலோசனை செய்தார். திறமையான வழக்கறிஞரான இவர் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த வழக்கில் இவர்தான் தனி ஆளாக வாதிட்டது.

அதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டிய வழக்கில் இரவோடு இரவாக இக்கட்டான நேரத்தில் வாதம் செய்து வெற்றி பெற்றதும் இவர்தான். இக்கட்டான நேரத்தில் திறமையாக வாதிடும் குணம் கொண்டவர்தான் வில்சன்.

இந்த நிலையில்தான் வில்சன் உடன் சட்ட ரீதியாக ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். இது போக இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.

கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+