Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விலாங்குமீன்" நழுவுதே.. அப்ப எல்லாமே போச்சா.. எடப்பாடிக்கு சவாலே இனிதான்.. "நியாயங்கள் காயங்களாகுதோ"

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து எடப்பாடி மேற்கொள்ள போகும் வியூகங்கள், என்னென்ன? என்பன போன்ற கேள்விகள் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் & பொதுச்செயலாளர் என்ற இந்த இரண்டு பதவியையுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிவரை விடாமல் தன்னிடம் வைத்திருந்தார்..

சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவிதான், அதிமுக இன்று 4ஆக பிளவுபடும் அளவுக்கு சென்றுவிட்டது.... ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாக இருந்து வந்தது.. இந்த பதவிக்காக, ஜெ.போலவே காய் நகர்த்தலையும் ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்த ஒரு வருட காலமாகவே, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற போஸ்டிங்கில் இருந்துகொண்டே, மறுபக்கம், அதிமுகவை தன் பக்கம் கொண்டுவருவதற்கான களப்பணியில் இறங்கினார்.. இதற்கு நடுவில், "பலம்வாய்ந்த" லீகல் டீமை வைத்து, சட்டரீதியாக போராடி, பொதுச்செயலாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்த பதவியேற்ற அடுத்த செகண்டே "எம்ஜிஆர்" போலவே கெட்டப் சேஞ்சும் அரங்கேறி முடிந்தது.

 கெட்டப் சேஞ்ச்

கெட்டப் சேஞ்ச்

இதைதான் அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி விமர்சிக்கும்போது, "இதேபோன்று தான் சசிகலாவும், அம்மாவைப்போல போலி வேடமிட்டார்.. அவருக்கு கடைசியில் என்ன நிகழ்ந்தது என்பதை நாடறியும் அதே முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிக்கிறார்" என்று சூசகமாக கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு பேட்டியில் சொல்கிறார் கேசி பழனிசாமி, "எடப்பாடியை வாழும் புரட்சித்தலைவர்" என்கிறார்களே.. இந்த நேரத்தில் அப்படியே ஒரு ஃபிளாஷ் பேக் போய் பாருங்க.. அம்மா மாதிரியே சசிகலாவின் நடை, உடை, சிகை அலங்காரம், சேலைக்கட்டு.. அதெல்லாம் இன்னைக்கு என்னாச்சு? இவரை "வாழும் எம்ஜிஆர்" என்கிறார்கள்.. கடைசியில் "வாழாவெட்டியாக" அவர் அரசியலை விட்டு விலகும் சூழ்நிலை ரொம்ப தூரம் இல்லை" என்று விமர்சித்திருந்தார்.

டைமிங்

டைமிங்

இதனிடையே, இடைக்கால ஆணை வந்ததுமே, எடப்பாடி சூட்டோடு சூடாக பதவியேற்றும் கொண்டது ஏன்? என்றும் சிலர் கேள்வியை கிளப்புகிறார்கள். பொதுவாக அதிமுக தலைவர்கள், முக்கியமாக ஜெயலலிதா போன்றோர் நேரம் காலம் பார்த்து, அதற்கு பிறகுதான், எந்த பொறுப்பையுமே ஏற்பார்கள்.. ஆனால், நீதிமன்ற அவசரம் கருதி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார்.. ஓபிஎஸ் அப்பீலுக்கு போயுள்ளதால், இந்த முடிவு என்ன ஆகும் என்று தெரியவில்லை.. அப்படியே எந்த உத்தரவு வந்தாலும், அதை எதிர்த்து அடுத்தடுத்த அப்பீல்கள் போய்க்கொண்டேதான் இருக்குமே தவிர, உடனடி தீர்வு கிடைக்காது.. அதைவிட முக்கியமாக தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை எப்படி ஒப்புக் கொள்ளும் என்பதும் மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது... இந்நிலையில், ஒரு சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளார்.

 ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன்


குறிப்பாக, "திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தந்ததில்லை.. திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? நிச்சயம் தராது.. இந்த இந்த இடைக்கால ஆணையே வெற்றி என்றால், ஜெயச்சந்திரன் என்ற தனி நீதிபதி ஓபிஎஸ்ஸூக்கு அன்று சாதகமாக இடைக்கால ஆணையை பிறப்பித்தாரே, அதையும் நாம் வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா?

 தகுதிநீக்கம்

தகுதிநீக்கம்

எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருகூட்டணி தலைவராவது இதுவரை வாழ்த்து சொன்னார்களா? தலைவருக்கு முதலில் தன்மீது நம்பிக்கை இருக்க வேண்டும், தன்னை சார்ந்தவர் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும்.. ராகுல் காந்தி, "தகுதிநீக்கம்' என்று சொன்னதுமே முதல்நபராக கண்டனம் பதிவு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்தியா முழுக்க கூட்டணி தலைவர்களின் கருத்துக்களை உடனுக்குடன் பதிவாகின.. அப்போதுதான், ஒரு கூட்டணி ஒத்துப்போகும்.. ஆனால், இங்கு அப்படி இல்லையே.. பொதுச்செயலாளர் தீர்ப்பில், எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் யுத்தமாகவே கூட்டணி தலைவர்களால் பார்க்கப்படுகிறது..

 வீக் பாயிண்ட்ஸ்

வீக் பாயிண்ட்ஸ்

கூட்டணியை பராமரிக்க வேண்டிய, கடமை ஸ்டாலினுக்கு இருக்கிறதைபோல, அதிமுக கூட்டணியை பராமரிப்பது யார்? காயங்களை நியாயப்படுத்துகிறார்கள்.. நியாயங்களை காயப்படுத்துகிறார்கள்.. இதுதான் அங்கே நடக்கிறது. இப்படியே மாறி மாறி வழக்கு சென்று கொண்டிருந்தால், அதிமுக பலவீனமாகுமா? ஆகாதா? பொதுச்செயலாளராக அவர் வருவதை வரவேற்கிறோம்.. கட்சியை பலப்படுத்தட்டும்.. ஆனால், பாரம்பரியமான வாக்குவங்கியை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? என்பதே என்னுடைய கேள்வி" என்கிறார் ஷ்யாம்.

 சிதறல்கள்

சிதறல்கள்

கூட்டணி என்பதைதாண்டி எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களில் சில சறுக்கல்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஏற்கனவே, கொங்குவில் எடப்பாடி பழனிசாமியின் வாக்கு வங்கு சரிந்து போயுள்ளது.. அதாவது, செந்தில் பாலாஜி, முத்துசாமி, வெள்ளக்கோயில், சக்கரபாணி, இப்படியான தலைவர்கள் ஒன்றுகூடி, எடப்பாடியின் வாக்கு வங்கியை இன்னும் சிதறடிக்கவே செய்வார்கள்.. அந்தவகையில், வரப்போகும் தேர்தலில், 15 சதவீதத்துக்குமேல் எடப்பாடியால் பெற முடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.. இதைதான் பாஜக மாநில தலைவர், மேலிட தலைவர்களிடம் சுட்டிக்காட்டி வருகிறாராம்..

 சுயபரிசோதனை

சுயபரிசோதனை

அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலில் தமிழகத்துக்கு பரிசோதனை தேவையா? அல்லது சீட் தேவையா? என்பதிலும் தெளிவு வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை.. அதாவது, பரிசோதனை என்றால் தனியாகவே நின்று காட்டுவது.. அது தென்மண்டலமாக என்றாலும்சரி, தனித்தே களமிறங்கினால்தான், ஒரு கட்சியின் பலம் என்ன என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.. எனவே, துணிந்து களமிறங்குவோம் என்கிறார் அண்ணாமலை.. அல்லது, எம்பிக்கள் தேவை வேண்டும் என்றால், ஒருங்கிணைந்த அதிமுக கண்டிப்பாக அவசியம் என்கிறார் அண்ணாமலை..

 க்ளைமாக்ஸ்

க்ளைமாக்ஸ்

ஆக, இந்த 2 முடிவுகளில் மேலிடம் எதை பரிசீலிக்க போகிறது என்று தெரியவில்லை.. ஒருவேளை, "ஒருங்கிணைந்த அதிமுக" என்று நெருக்கடி தந்தால், அதற்கு நிச்சயம் எடப்பாடி ஒப்புக் கொள்ள மாட்டார்.. அல்லது பாஜக "தனித்து போட்டி" என்றால், இது கொங்குவில் சரிவை சந்தித்து கொண்டிருக்கும் எடப்பாடிக்கே மைனஸ் ஆக அமைந்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. டிடிவி தினகரனை பொறுத்தவரை தென்மண்டலங்களில் பலமான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளார்.. கடந்த முறை தேர்தலில், திமுகவின் வாக்குகளை பிரித்ததே அமமுகதான் என்பதால், தினகரனின் விஸ்வரூபம் தென்மண்டலத்தில் விரிவடைந்து வருகிறது.

அசையுதா அச்சாணி

அசையுதா அச்சாணி

இதை எப்படி எடப்பாடி சரிக்கட்ட போகிறார்? தினகரனுக்கு இருக்கும் வாக்கு வங்கியை உடைத்து, அவைகளை எப்படி அதிமுகவுக்கு திருப்ப போகிறார்? சீனியர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் போன்றோரால் மட்டுமே, அச்சமூக வாக்குகளை முழுமையாக கொண்டுவந்துவிட முடியுமா? பாஜக விஷயத்தில் கூட்டணி தொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார்? இழந்துபோன பாரம்பரிய வாக்கு வங்கிகளை மீட்டெடுக்க என்னென் வியூகங்களை வகுக்க போகிறார்? சீனியர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவர்களை எல்லாம் எப்படி சமாதானப்படுத்த போகிறார்? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ரப்புகளாக எழுந்துள்ளன.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+