தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு.. ஆனாலும் சிசேரியன்கள் அதிகம்! ஆறுதலும் கவலையும்!
சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்று இறப்பு விகிதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை இருந்தது. இது கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
பிறந்ததில் இருந்து 1 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இந்த ஐஎம்ஆர் இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின் படி குழந்தை எண்ணிக்கை 9ஆக குறைந்துள்ளது.
இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்து 48 ஆக குறைந்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.
ஆனால் அண்மைக்காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்டவைகளால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே பிரசவங்கள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications