பெண் அரசு ஊழியரின் 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு தரலாம்.. உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவர், மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால் முன்சீப் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக கருவுற்ற நிலையில், பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என்றும், வழங்க மறுத்தது நியாயமற்றது என்றும் கூறியுள்ளது.
மகப்பேறு விடுப்பு எத்தனை குழந்தைகளுக்கு வழங்குவது, எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழகத்தில் விரிவான அரசாணையே இருக்கிறது.முதல் இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையின் படி, "திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.

அரசாணை என்ன
இதை கருத்தில் கொண்டு மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும். சிறப்பு, தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.4.2025 அன்று முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். 28.4.2025-க்கு முன்பு முடிவுற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நிராகரித்த முன்சீப் நீதிபதி
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா என்பவர், மூன்றாவது பிரசவத்துக்கு 2025 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரை ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் வழங்கக் கோரி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு விண்ணப்பத்திருந்தார். ஆனால் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதியின் மகப்பேறு விடுப்பு மறுக்கும் உத்தரவை எதிர்த்து, நீதிமன்ற ஊழியர் ரஞ்சிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற ஊழியர் மனு தாக்கல்
அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவதாக கருவுற்றேன். குழந்தை பிறப்புக்கான உத்தேச தேதியாக, செப்டம்பர் 11 என, டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். எனவே மூன்றாவது பிரசவத்துக்கு, கடந்த மாதம் ஆகஸ்ட், 18 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வரையிலான ஓராண்டுக்கு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் வழங்கக்கோரி, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, கள்ளக்குறிச்சி முன்சீப் நீதிமன்ற நீதி பதிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, ஆகஸ்ட் 19ல், முன்சீப் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றம் 3-வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. எனவே, எனக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருந்தார்.
நீதிபதிகள் தீர்ப்பு
இந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நியாயமற்றது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.தினேஷ், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பில் வழக்கறிஞர் பி.பூங்குழலி ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "மனுதாரர் ரஞ்சிதா, அரசு வேலையில் சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக கருவுற்ற நிலையில், பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என, உமாதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3வது பிரசவத்திற்கு உரிமையில்லை என கூற முடியாது
அதன்படி, மனுதாரருக்கு உளுந்துார்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதி, சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே, மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அது முதல் அல்லது இரண்டாவது பிரசவத்துக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, 3வது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மேலும், 3வது பிரசவத்துக்கு விடுப்பு பெற உரிமை இல்லை எனக்கூற முடியாது.
நீதிமன்றம் ரத்து
மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்கவும் முடியாது என்பதால், மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகை கோரிய ரஞ்சிதா விண்ணப்பத்தை நிராகரித்த முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினார்கள். இந்த தீர்ப்பின் மூலம் மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு சலுகையை பெண்கள் அனுபவிக்க முடியும்.
என்ன விதி
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்ட ஆணையில், அரசு பெண் ஊழியர்களுக்கு இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த அரசு ஆணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது, அரசியல் சாசனத்தின் 14, 21 மற்றும் 42-வது பிரிவுகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. . ஒரு தாயின் அடிப்படை உரிமையையும், பெண் ஊழியரின் உடல்நலம் மற்றும் மனநலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிப்பதற்காகவே இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே விடுப்பு என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், மனிதநேயம் மற்றும் பெண்ணின் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று என்பது நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது .
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications