முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து.. மார்வாடிகளுக்கு சிவப்பு கம்பளமா.. திருமுருகன் காந்தி தாக்கு
பாஜகவை சரமாரி விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் திருமுருகன்காந்தி
சென்னை: "இந்து முஸ்லீம் என பிரித்து நடுவில் மார்வாடிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது பாஜக.. முஸ்லீம் மீது வெறுப்பை உமிழ்ந்து நம்மை திசை திருப்புகிறது அக்கூட்டம்... நம்மை முஸ்லீம்-இந்து என பிரித்துவிட்டு நம் வரிப்பணத்தை மார்வாடிக்கு படியளக்கிறது, கொரோனா நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு" என்று திருமுருகன் காந்தி பாஜகவை சரமாரியாக விமர்சித்து உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று திருப்பி செலுத்தாத 50 பேரின் லிஸ்ட் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆளுங்கட்சியினர் பலமாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கினர்.
இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு ரிசர்வ் வங்கியிடம் மனு அளிக்கவும், அதன்படி அவர்களின் பட்டியலும் வெளியிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி விவரங்களையும் தெரிவித்தது.

விஜய் மல்லையா
அதாவது, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் ரூபாய் கோடி வாராக் கடனை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது. "இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.

எதிர்ப்பு
இந்த வரிசையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் ட்வீட் மேல் ட்வீட்களை போட்டு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்கள் இவைதான்: "தமிழ்நாடு சிறு-குறு தொழிலால் வளர்ந்த மாநிலம். தமிழகத்தின் பல நூறு நகரங்கள் இத்தொழிலால் வளர்ந்தன. இதை ஜிஎஸ்டி சீரழித்தது. இந்த வரியில் தமிழகத்தின் பங்கை இதுவரை கொடுக்காத மோடி அரசு , மார்வாடிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்கிறது"

பாஜக
"பாஜகவின் தமிழின வெறுப்பையும், மார்வாடி பாசத்தையும் அம்பலப்படுத்தும் தோழர்களுக்கு வாழ்த்துகள். தமிழர்களே எச்சரிக்கை. உங்களை இந்து முஸ்லீம் என பிரித்து நடுவில் மார்வாடிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்".. "முஸ்லீம் மீது வெறுப்பை உமிழ்ந்து நம்மை திசை திருப்புகிறது பாஜக கூட்டம். நம்மை முஸ்லீம்-இந்து என பிரித்துவிட்டு நம் வரிப்பணத்தை மார்வாடிக்கு படியளக்கிறது. #மார்வாடிகளுக்கு_படியளக்கும்_பாஜக"

முஸ்லீம்கள்
"தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை வார்க்கிறது" "காவிரிமேலாண்மை வாரியம்-மின்சார உரிமை-கல்லூரிக்கு நீட் என தமிழ்த்தேசிய உரிமையை பாஜக மறுக்கிறது. முஸ்லீம் வெறுப்பை கக்குபவர்கள் தமிழன் மீதான தாக்குதலை ஏன் பேசுவதில்லை? ஜாதிக்காக மீசை முறுக்கும் தமிழன், இனத்துக்காக எப்போது எழுவான்?"

காவிரி மேலாண்மை
தமிழனுக்குள் சாதி பெருமையை கொம்பு சீவுவது, முஸ்லீமுக்கு எதிராக வன்மத்தை வளர்த்துவது என்று நம்மைப் பிரித்து நம் நகரங்களை மார்வாடிக்கு தாரை வார்த்தார்கள். கோவையில் பாஜக வளர்ந்த பின் கொங்கு மண்டலம் மார்வாடி மண்டலமானது.. என்று அடுத்தடுத்து ட்வீட்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

எழ மாட்டான்
மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா ..இந்த தமிழன் ஜாதியாக பிரிந்து கிடைக்கும் வரை தமிழன் என்று ஒன்று கூடி எழ மட்டான், சமீப காலமாக சாதி பெருமையை பேசவைப்பதற்காக நிறைய பேரு வேலை செய்கிறார்கள் என்றும், "இதைத்தானே சீமான் சொல்றார்! அவர் சொன்னா மட்டும் அது இனவெறி என்றாகி விடுகிறது ! என்ன விந்தை' என்றும் பதிலடிகளையும், கேள்விகளையும் தெறிக்க விட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications