கோடை விடுமுறை.. பள்ளிகளுக்கு மட்டுமல்ல, வங்கிகளுக்கும்.. மே மாத ஸ்பெஷல்!
மே மாதத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கோடை விடுமுறையில்லை, வங்கிகளுக்கும் தான் என்பது போல், இந்த மாதம் வங்கிகள் மொத்தம் 12 நாட்கள் மூடப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கி இந்தியா (RBI) வெளியிட்ட அதிகாரப்பூர்வ காலண்டரின் படி, தேசிய விடுமுறைகள், பிராந்திய பண்டிகைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் உட்பட பல்வேறு காரணங்களால் இந்த மாதம் வங்கி சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. இது வழக்கத்தை விட அதிகமான விடுமுறை நாட்களாகும்.

ஏன் விடுமுறைகள் அதிகம்?
இந்த ஆண்டு மே மாதத்தில் பிராந்திய பண்டிகைகள் மற்றும் சட்டப்பூர்வ விடுமுறைகள் அதிகம் இருக்கும் காரணத்தால் விடுமுறை நாட்களும் அதிகம் வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விடுமுறை இல்லை.
பல விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை இல்லை. எனவே மக்கள் தங்கள் மாநில வங்கி அட்டவணையை சரிபார்த்து திட்டமிட வேண்டும்.
மே மாதம் தொடக்கத்திலேயே விடுமுறைகள் துவங்கியுள்ளன. மே 1 அன்று மகாராஷ்டிரா தினம், தொழிலாளர் தினம், புத்த பூர்ணிமா மற்றும் பண்டிட் ரகுநாத் முர்மு பிறந்தநாள் ஆகியவை கொண்டாடப்படும் காரணத்தால் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டது. ஆனால் குஜராத் மற்றும் ஒடிஷா போன்ற சில மாநிலங்களில் வங்கி பணிகள் நடந்துள்ளது.
மே மாதத்தில் பல விடுமுறைகள் பிராந்திய அளவில் மட்டுமே உள்ளன. உதாரணமாக சிக்கிம் மாநிலம் மே 16 அன்று தனது மாநில தினத்தை கொண்டாடுகிறது. திரிபுராவில் மே 26 அன்று காஜி நஜ்ருல் இஸ்லாம் பிறந்தநாள் விடுமுறையாகும். மேலும் பக்ரீத் மே 27 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை வேறுபடுகிறது.
தமிழ்நாட்டில் மே 1 மற்றும் மே 28 (பக்ரீத்) மட்டுமே விடுமுறை மற்ற நாட்களில் வங்கி சேவை முழுமையாக இயங்கும்.
வார இறுதி விடுமுறைகள்
வழக்கமான விடுமுறைகளுடன் ஞாயிற்றுக்கிழமைகள் மே 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்படும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளான மே 9 மற்றும் மே 23 அன்றும் அனைத்து வங்கிகளும் மூடும். மே 9 அன்று மேற்கு வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.
டிஜிட்டல் சேவைகள் தொடரும்
வங்கி கிளைகள் மூடினாலும் டிஜிட்டல் சேவைகள் பாதிக்கப்படாது. UPI, மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் ATM மூலம் பணம் எடுக்கும் சேவைகளை இயல்பாக செயல்படும். ஆனால் செக் கிளியரன்ஸ், ஆவணங்கள் சமர்ப்பது அல்லது நேரடி ஆலோசனை போன்ற கிளை சார்ந்த சேவைகள் மட்டும் இந்த விடுமுறை நாட்களில் இயக்காது.
தமிழ்நாட்டில் மே 1 மற்றும் மே 28 மட்டுமே விடுமுறை மற்ற நாட்களில் வங்கி சேவை முழுமையாக இயங்கும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications