4 மாதமாக சம்பளம் போடலை.. எஸ்பி ஸ்பெஷல் டீம் வைத்து லஞ்சம் வாங்குகிறார்.. டிஎஸ்பி சுந்தரேசன் பரபர!
மயிலாடுதுறை: 4 மாதமாக தனக்கு சம்பளம் போடவில்லை என்று மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார். விஆர்எஸ் வாங்க முடிவெடுத்து போதும் கடைசி நேரத்தில் எஸ்பி விடவில்லை என்று கூறிய சுந்தரேசன், ஸ்பெஷல் டீம் மூலமாக அவர் லஞ்சம் பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அரசு வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதன்பின் உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்று டிஎஸ்பி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகியது.

இதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து டிஎஸ்பி சுந்தரேசன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சில அதிகாரிகள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய பின், மயிலாடுதுறைக்கு 2024, நவம்பர் மாதம் வந்தேன்.
நான் சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். ஆனால் மார்ச் மாதம் வரை எனக்கு சம்பளம் போடவில்லை. இதுதொடர்பாக எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளேன். இவையனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விஆர்எஸ் கொடுத்துவிட்டேன். அப்படிக் கொடுத்தால், 3 துறைகள் சார்பாக விசாரிப்பார்கள்.
நற்சான்றிதழ் இருந்தால் உடனடியாக விஆர்எஸ் கொடுத்துவிடுவார்கள். 3 துறைகளிலும் விசாரித்து எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லையென்று தெரிந்த பின், ஏப்ரல் மாதத்துடன் வேலையில் இருந்து போகவிருந்தேன். ஆனால் மார்ச் மாதம் மாவட்ட எஸ்பி அழைத்து அறிவுரைகளை அளித்தார். அதன்பின் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்கிறார்கள்.
என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது யார் தெரியுமா? இந்த எஸ்பி, காவல் ஆய்வாளர்.. காவல் ஆய்வாளர் என்று சொல்லுவதற்கு லாயக்கில்லை.. ஏடிஜிபி சட்டம் - ஒழுங்கு, ஐஜி மற்றும் எஸ்பி ஆகிய மூவரும் நின்று பேச வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்று நன்றாகத் தெரியும். போலீஸ் விதிகளில் இது மிகப்பெரிய தவறு.. தெரியாமல் பேசவில்லை..
இந்த அதிகாரிகளுக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை இப்படிப் பேசுவதற்குத் தூண்டிவிட்டார்கள். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கும் வரை, என்னை மாதிரியான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். அஜித் குமார் வழக்கில் மேல் அதிகாரிகளின் தவறான உத்தரவால், அனைத்து போலீஸ் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது.
இதே எஸ்பி-யும் அதனைத்தான் செய்து வருகிறார். சிறப்பு டீம் ஒன்றை வைத்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சிறப்பு டீம் யாரென்று மேல் அதிகாரிகள் விசாரித்தால் தெரியும். எந்த விசாரணையாக இருந்தாலும், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications