"ஆபாச வீடியோ இருக்கு.." தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாஜக நிர்வாகி மும்பையில் கைது!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் என்பவரை மயிலாடுதுறை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதி உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதினத்தின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
பணம் பறிக்க முயற்சி: அதாவது தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. தருமபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும் அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் ஆகியோர் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் முதற்கட்டமாகத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத் (32) மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தாளாளர் குடியரசு (39), ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்தவர் கைது: இதற்கிடையே இதில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் சமீபத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் மயிலாடுதுறை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே தனிப்படை போலீசார் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரத்தை கைது செய்துள்ளனர். மும்பையில் அகோரம் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை: இப்போது அவரை தமிழகம் அழைத்து வரும் நடவடிக்கையில் மயிலாடுதுறை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரிடம் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தன்னை மிரட்டி பணம் பறிப்பதாகத் தருமபுரம் ஆதீனம் அளித்த புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications