Mayor Priya: எம்எல்ஏ கனவில் சென்னை மேயர் பிரியா? சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம்! எந்த தொகுதி தெரியுமா?
சென்னை: வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விருப்பமனு கேட்டு தாக்கல் செய்துள்ள மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி துணை மேயராக உள்ள மகேஷ் குமாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளாராம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக விரைவில் தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களையும் தேர்வு செய்யவும் திட்டமிட்டு வருகிறது. கட்சியில் தற்போது விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் பல சிட்டிங் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேயர் பிரியா போட்டியிடுகிறார்?
இதுதவிர புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சில தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் மேயர் பிரியா போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
சென்னையில் முதல் தலித் பெண் மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரியா பதவியேற்றார். சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடமே உள்ளது. இதனால், மாமன்றத்தில் கவுன்சிலராக இருப்பவர்களில் சிலரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.
திருவிக நகர் தொகுதி
அதாவது 10- க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளார்களாம். குறிப்பாக சென்னை மேயராக இருக்கும் பிரியா, வட சென்னைக்கு தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
விருப்பமனு கேட்டு தாக்கல் செய்துள்ள நிலையில், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்து வருவதாக சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி துணை மேயராக உள்ள மகேஷ் குமாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளாராம்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
துணை மேயர் மகேஷ் குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. திருவிக நகர் தொகுதியில் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக தாயகம் கவி இருந்து வருகிறார். சைதாபேட்டை பகுதியை சேர்ந்த தாயகம் கவிக்கு, திருவிநக நகர் தொகுதி தனித்தொகுதி என்பதால் அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திருவிக நகர் தொகுதி மேயர் பிரியாவுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மேயர் பிரியாவும் திருவிநக நகரில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி மேலும் சில கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுவதால் இந்த முறை சென்னையில் சில தொகுதிகளில் புதுமுகங்களை பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications