தொண்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென திரும்பி விரலை நீட்டி எச்சரித்த வைகோ.. இது எப்போ?
சென்னை: மதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. இதற்கிடையே துரை வைகோ தான் கட்சி என்று வைகோவை பார்த்துக் கத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சற்று கோபமடைந்த வைகோ அந்த நபரை எச்சரிக்கும் வகையில் கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே மதிமுகவில் சிறு குழப்பம் ஏற்பட்டு இருந்தது. அதாவது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

மதிமுக மோதல்
இதனால் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் துரை வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மல்லை சத்யா மீதான அதிருப்தி காரணமாகவே துரை வைகோ தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
வைகோ டென்ஷன்
இரு தரப்பிற்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நேற்று (ஏப்ரல் 20) மதிமுக நிர்வாகக் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூட்டினார். இரு தரப்பினரின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த வைகோ, இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். துரை வைகோ தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற நிலையில், இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களையும் சந்தித்தனர். இதற்கிடையே நிர்வாகக் குழுவுக்கு வைகோ வந்தபோது, அங்கு நடந்த சில சம்பவங்கள் பரபரப்பைக் கிளப்பியது.
அதாவது காரில் வைகோ வந்து இறங்கும்போது, தொண்டர்கள் சிலர் துரை வைகோ தான் கட்சியே என்று சொல்லிக் கோஷமிட்டனர். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த வைகோ, அந்த நபரை எச்சரித்தார். கை விரலை நீட்டி அந்த நபரை வைகோ எச்சரித்த நிலையில், அதன் பிறகே கூட்டம் அமைதியானது. பிறகு மக்கள் தலைவர் வைகோ எனக் கோஷமிட தொடங்கினர்.
மீண்டும் மீண்டும் முழக்கம்
இருப்பினும், அது கொஞ்ச நேரம் மட்டுமே நீடித்தது. மீண்டும் கட்சித் தொண்டர்கள் இளம் தலைவர் துரை வைகோ என முழக்கமிடத் தொடங்கினர். வைகோ மீண்டும் ஒரு முறை அமைதியாக இருக்கச் சொன்னபோது, சில நொடிகள் மட்டுமே கட்சியினர் அமைதி காத்த நிலையில், மீண்டும் கோஷமிடத் தொடங்கினர்.

முடிவுக்கு வந்த மோதல்
மல்லை சத்யா தரப்பினர் எனச் சிலர் துரை வைகோ குறித்து இணையத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கட்சியில் இருந்து விலகிய சிலர் அதுபோல கருத்துகளைப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தனக்கும் அதுபோல கருத்துக்களைப் பதிவிட்டவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் மீண்டும் இதுபோல நடக்காது என மல்லை சத்யா விளக்கமளித்ததாக தெரிகிறது.
இந்த விளக்கத்தைத் துரை வைகோவும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார். தொடர்ந்து வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா ஆகிய மூன்று பேரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றப் போவதாகத் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மதிமுக உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications