"கருணாநிதி- அன்பழகன் நட்பு இருக்கே.." பழைய நினைவுகளில் மூழ்கிய வைகோ! வியந்துகேட்ட கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருணாநிதி- அன்பழகன் நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.

திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் இருந்த மறைந்த பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டங்களை திமுக மாநிலம் முழுக்க நடத்தி வருகிறது. இப்படி மாநிலம் முழுக்க 100 கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வைகோ

வைகோ

இந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இந்தியாவில் சிறந்த நிர்வாகம் இருக்கும் மாநிலம் தொடர்பாக இந்தியா டூடே நடத்திய அறிக்கையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. அன்பழகனின் தந்தை கதர்கடை கல்யாணசுந்தரனார். அவர் அந்த காலத்துச் சுயமரியாதைக்காரர். அப்போதே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத் தனது கதர்கடையில் பணியமர்த்தினார்.

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

தந்தை பெரியார் மீது அளவற்ற பற்று கொண்டவர் கல்யாணசுந்தரனார். அவர் தான் அன்பழகனை முதலில் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அந்த சிறு வயதிலேயே பெரியார் தத்துவங்கள் அவரது மனதில் பதிந்துவிட்டது. அதன் பிறகு அவர் பள்ளி, கல்லூரியில் பல பேச்சு போட்டிகளில் தமிழ் பற்றியும் பெரியார் பற்றியும் பேசினார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அடுத்துத் தான் அவர் அண்ணாவை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதன் பிறகு தொடர்ச்சியாகத் திராவிட இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் என் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். இடையில் நான் வழிதவறி சென்ற 29 ஆண்டுகள் நான் அவரை பார்க்கவில்லை.. பேராசிரியர் தந்த உற்சாகம் தான் ஸ்டாலினை முதல்வர் பதவிக்கு அழைத்து வந்துள்ளார். திமுகவுக்கு அவர் 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தவர் அன்பழகன்.. கருணாநிதிக்கு எப்போதும் பக்கபலமாக அரணாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு லட்சியம், கொள்கை அடிப்படையிலானது.. அவர்கள் இருவரும் சேர்ந்து தான் ஸ்டாலினை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

பக்க பலமாக இருப்போம்

பக்க பலமாக இருப்போம்

அவர் எதிர்பார்த்ததைவிட ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார். மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் அரசை ஸ்டாலின் நடத்திவருகிறார். இந்தியா முழுக்க ஒரே முறையைக் கொண்டு வர பாஜக முயல்கிறது. இதை எதிர்க்க ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக நாங்கள் இருப்போம்.. ஆதிக்க சக்திகளை நாம் ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடக் கூடாது. இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தப் பலரும் முயல்கிறார்கள். அது நடக்காது. சூரிய கதிர்கள் எப்படி ஒரே சக்தியாக வருகிறதோ. அப்படி ஆதிக்க சக்திகளை ஒன்றாக இருந்து எதிர்கொள்வோம்" என்று அவர் தெரிவித்தார்.

திமுகவைக் கட்டிக்காத்தவர்

திமுகவைக் கட்டிக்காத்தவர்

அனைத்து துறைகளிலும் மகத்தான சாதனை படைத்தவர் அன்பழகன் என்றும் கருணாநிதியுடன் இணைந்து திமுகவா அன்பழகன் கட்டிக்காத்தார் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பெருமிதம் தெரிவித்தார். அதேபோல திராவிட கொள்கையில் கடைசி வரை பிடிமானத்தோடு இருந்தவர் பேராசிரியர் என்றும் மத்தியில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஒற்றை மதத்தைத் திணிப்பதை எதிர்த்து வெளிநடப்பு செய்தவர் என்றும் மனிதநேய மக்கள் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டவர்

சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டவர்

கருணாநிதிக்கும் திமுகவுக்கும் பக்க பலமாக இருந்தவர் அன்பழகன் என்று கூறிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கொண்ட கொள்கையில் உறுதியுடனும், தொலைநோக்கு சிந்தனையையும் கொண்டவர் அன்பழகன் என்றும் புகழ்ந்து பேசினார். அதேபோல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டவர் அன்பழகன் என்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் தைரியம் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+