"அவர்" இங்கே வர போறாராமே, உண்மையா?.. பொறுப்பை ஏற்ற துரை வைகோ.. மதிமுகவின் 2வது இன்னிங்ஸ் ஆரம்பம்
துரை வைகோ புதிய பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்று கொண்டார்
சென்னை: மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தன்னுடைய கட்சி பொறுப்பை அதிகாரப்பூர்வமாக துரை வைகோ ஏற்றுக் கொண்டார்.. அத்துடன் "வலதுசாரி சிந்தாந்தத்தை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்றும் அரசியலை நான் முன்னெடுப்பேன்" என்று துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
துரை வைகோவை ஒருவழியாக கட்சிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.. அவருக்கு பதவி தர வேண்டும் என்று பலர் மதிமுகவில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது..
ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்துவிட்டு திமுகவில் இருந்து வெளியே வந்த நிலையில், மறுபடியுமே நானே எப்படி சொந்த கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா? இதை பலரும் விமர்சிப்பர் என்று வைகோ மறுத்ததாகவும், ஆனால் அவரை கட்சி நிர்வாகிகள்தான் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டன.

விமர்சனம்
பிறகு ஒரு கட்டத்தில், "துரையும் கட்சிக்குள் வரவேண்டுமெனறு கட்சியிலேயே பலபேர் கேட்கிறார்கள்... இதில் எனக்கு இஷ்டம் இல்லை.. ஆனாலும் இதுபற்றி கட்சி தான் முடிவு செய்யும் என்று வைகோவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாசெக்கள் கூட்டம் நடந்தது... இந்த கூட்டத்தின் முடிவில் வைகோ சொன்னதாவது:

நியமனம்
"துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்... மதிமுகவின் சட்டப்படி இந்த பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது... 106 பேர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்" என்று வைகோ அறிவித்தார். அதன்படி, துரை வைகோ நேற்று தலைமை கழக செயலாளர் பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார். பிறகு, வைகோவும், துரை வைகோவும் கட்சி அலுவலகமான தாயகத்திற்கு வந்து பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...
Recommended Video

அறிவாலயம்
அடுத்ததாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்... செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "துரை வைக்கோவிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதில் கட்சியில் 100% திருப்தியே.. ஒரு துளிகூட அதிருப்தி இல்லை என்றார்.. உடனே பக்கத்தில் இருந்த துரை வைகோவும், வலதுசாரி சிந்தாந்தத்தை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்றும் அரசியலை நான் முன்னெடுப்பேன்" என்றார். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பிரதான புள்ளி மறுபடியும் வைகோ பக்கமே தாவக்கூடும் என்ற செய்திகள் பரபரக்கின்றன.. அவர் வேறு யாருமில்லை.. மூத்த தலைவர் நாஞ்சில் சம்பத்தான்..

நாஞ்சில் சம்பத்
2 நாளைக்கு முன்பு இவர் ஒரு பிரபல நாளிதழுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஒருநாளும் ஸ்டாலினை போட்டியாளராக வைகோ கருதவில்லை... அது தேவையும் இல்லை... ஸ்டாலினின் களம் வேறு, வைகோவின் களம் வேறு... வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் மதிமுக தொடங்கப்பட்டது என்று சொல்வது வரலாற்று பிழை. இன்றைக்கு தம்பி துரை வைகோ மதிமுக-வின் தலைமைக் கழக செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார். மதிமுக-வில் இருக்கிற தொண்டர்கள் அதை உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

பொதுமக்கள்
எந்த ஒரு முடிவையும் அந்தக் கட்சியினுடைய தொண்டர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த முடிவை பொதுமக்களும் ஏற்றுக்கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டுவந்து நிறுத்தும்... அதுதான் இங்கேயும் நடக்கப்போகிறது" என்கிறார்... நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சுதான் பல்வேறு வியூகங்களையும் சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.. மதிமுகவில் தன் அரசியலை தொடங்கியவர்.. மூலை முடுக்கெல்லாம் சென்று மதிமுகவின் கொள்கையை பலப்படுத்தியவர்..

துரை வைகோ
வைகோவின் தம்பி என்ற பெயரை தன் உழைப்பாலும், பேச்சாலும் வெகுசீக்கிரத்தில் தட்டி சென்றனர்.. இப்போது தொய்வில் சென்று கொண்டுள்ள கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த நாஞ்சில் சம்பத் போன்ற சீனியர்களும், பேச்சாளர்களும் தேவை என்ற கட்டாயத்தை மதிமுக உணர்ந்துள்ளதாக தெரிகிறது.. அதனாலேயே விலகிய கட்சியிலேயே நாஞ்சில் சம்பத் மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், துரை வைகோவின் அரசியல் பயணம் தற்போது உற்சாகத்துடன் ஆரம்பமாகி உள்ளது..!
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications