மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. சென்னை அப்பல்லோவில் சிகிச்சை!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடலநலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. வைகோ கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு அதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் வைகோவின் விரலில் காயம் ஏற்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திடீரென வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வைகோ விரைந்து பூரண உடல் நலன் பெற வேண்டும் என்றும் பிரார்த்தித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் கூட வைகோவுக்கு வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் பூரண உடல் நனன் பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications