தேதி குறிச்சாச்சு! முதல் ஆளாக களத்தில் இறங்கிய வைகோ.. ஆளுநருக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்!
சென்னை: திமுக அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளது மதிமுக. ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் இருந்து விலகக் கோரி, வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெறும் என மதிமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநர் செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்று முடிவெடுத்து இதுகுறித்து ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். அதனை மிகவும் தாமதித்தே ஏற்றுக்கொண்டார் கவர்னர்.
செந்தில் பாலாஜி குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதால் தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இப்படி சமீபத்திய நிகழ்வு வரை திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், மதிமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சிப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் இருந்து விலகக் கோரி, வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் பொதுசெயலாளர் வைகோ பங்கேற்பதாகவும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்.
மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் கோவையிலும், பொருளாளர் மு.செந்திலதிபன் கடலூரிலும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்சென்னையிலும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றனர்.
அதேபோல துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி விழுப்புரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருநெல்வேலியிலும், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் குடந்தையிலும், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications