உதயசூரியனா செல்லாது செல்லாது! பம்பரத்தில்தான் போட்டி.. அண்ணா அறிவாலயத்தில் மதிமுக திட்டவட்டம்
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என மதிமுக அவை தலைவர் அர்ஜுன் ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக், மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் ராமநாதபுரம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் நாமக்கல் தொகுதி கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டும் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தின.
அதில் உடன்பாடு எட்டப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இந்த நிலையில் மதிமுகவும் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
நாங்கள் எங்கள் சின்னமான பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். திமுக நிர்பந்தித்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட மதிமுக கோரி வரும் நிலையில் அதை திமுக ஏற்குமா இல்லை நிராகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications