திருவள்ளுவர் தினம்..டாஸ்மாக் விடுமுறை! இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவு.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதியான நாளை மறுநாள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
இதனையடுத்து தமிழகத்தில் பொங்கல் பானை விற்பனையும் களைகட்டி உள்ளது. புத்தாடை எடுக்க துணிக்கடைகளில் மக்கள் கூடியிருக்கின்றனர். இதற்கிடையே மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் தினம்:
15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்திற்காகவும் 16ஆம் தேதி உழவர் திருநாளை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 14ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது 17ஆம் தேதியும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இறைச்சிக் கூடங்கள்:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் இறைச்சிக் கூடங்கள் இறைச்சி விற்பனையகங்கள் மூடப்படுவது வழக்கம். இதேபோல சில குறிப்பிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதியான நாளை மறுநாள் இறைச்சி கூட்டங்களை மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு விடுமுறை:
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
ஏற்கனவே திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினங்களில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனுமதி பெற்ற ஓட்டல்களின் பாா்களில் மதுவிற்பனை நடைபெறாது. மீறி விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications