தீபாவளிக்கு மறுநாள் சென்னையில் இறைச்சி கடைகள் மூடல்.. வந்த திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?
சென்னை: நாடு முழுக்க நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 21ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. இந்தாண்டு தீபாவளி நாளை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. எப்போதும் மக்கள் தீபாவளியை தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடவே விரும்புவார்கள். இதனால் சென்னை, கோவை உட்படப் பெருநகரங்களில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகிறார்கள்.

பொதுமக்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் கூட இயக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 6.15 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் நெரிசல் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
இதற்கிடையே தீபாவளிக்கு மறுநாள், அதாவது அக்டோபர் 21ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மகாவீர் நிர்வான் தினம் வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே அன்றைய தினம் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல், ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தீபாவளிக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள், ஊர் திரும்ப வசதியாகத் தீபாவளிக்கு மறுநாள், 21ம் தேதி பொது விடுமுறையாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications