"நம்மை காக்கும் 48".. கூடுவாஞ்சேரியில் மு.க. ஸ்டாலின் துவக்கிய திட்டம்.. ஏன் முக்கியமானது தெரியுமா
'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படக் காரணம், அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காததுதான்...
இதைத் தடுக்கவும், விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையிலும், "இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
இது தொடர்பான திட்டங்களைதான், இன்று மேல்மருவத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.. முன்னதாக, கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார்... இந்த இன்னுயிர் காப்போம் இத்திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்
விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்... அதேபோல, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதுதான் இந்த "இன்னுயிர் காப்போம்" என்ற திட்டமாகும்..

எதிர்பார்ப்பு
இதனிடையே, செங்கல்பட்டு வரும் முதல்வர், தங்கள் மாவட்ட பிரச்சனைகளை தீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும்..

திட்டப்பணிகள்
அதேபோல, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், செட்டிப்புண்ணியம் ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதால், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், திருப்போரூரில் பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளதால் இவைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்குமா? என்று மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications