சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி தற்கொலை
சென்னை: சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மரணத்தால் மனம் உடைந்து பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (27). செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துள்ளார். அத்துடன் அங்கேயே, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அத்துடன் அதே பல் மருத்துவமனை கல்லூரியில் டாக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை இந்து, நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால், அங்கிருந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications