"சூப்பர் மாடல்" நடிகை மீரா மிதுனை காணவில்லை- கமிஷனர் அலுவலகத்தில் தாயார் பரபரப்பு புகார்
சென்னை: தனது மகள் மீரா மிதுனை காணவில்லை என அவரது தாயார் சியாமளா காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அனுப்பியுள்ளார்.
சாதா மாடல் இல்லை தான் ஒரு சூப்பர் மாடல் என தனக்கு தானே சொல்லிக் கொள்பவர் மீரா மிதுன். இவர் மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே பிரபலமடைந்தார். அதிலும் சினேகன் செய்யாத தப்பை செய்ததாக கூறி கூப்பாடு போட்டவர்.
பின்னர் கமல் குறும்படம் போட்டு காட்டினார். இந்த நிலையில் இவர் அவ்வப்போது அழுதபடியே ஏதாவது ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி வந்தார். இந்த நிலையில் இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அண்மையில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

வீடியோ ஆதாரம்
இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீதும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன் பிறகு அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆம் தேதி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ் அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதும் மீரா மிதுன் ஆஜராகவில்லை. ஆனால் அவரது நண்பர் சாம் ஆஜரானார். இந்த நிலையில் மீரா மிதுன் அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வருவதாகவும் அவரை கைது செய்ய முடியவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செல்போன் ஸ்விட்ச் ஆப்
மேலும் மீராமிதுனின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என காவல் துறை தெரிவித்தனர். 2 வாரங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் அவரை இதுவரை கைது செய்யாததால் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் காவல் துறை மீது கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது.

மீண்டும் விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த 19ஆம் தேதி வந்தது. அப்போதும் மீரா மிதுன் தலைமறைவாகவே உள்ளார். அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மகளை காணவில்லை
இந்த நிலையில் தனது மகளும் நடிகையுமான மீரா மிதுனை காணவில்லை என அவரது தாயார் சியாமளா புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் துறை அலுவலகத்தில் சியாமளா புகார் கொடுத்ததுடன் அவரை விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் என கோரிக்கையையும் எழுப்பியுள்ளார். இதனால் மீராமிதுன் உண்மையிலேயே காணாமல் போனாரா இல்லை போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து ஸ்டன்ட் அடிக்கிறாரா என்பது தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications