நைட்டியுடன் ஓடிய மேகா.. அதுவும் கணவன் தூங்கும்போதே.. மாதம் 10 லட்சம் ஈட்டும் கேரள யூடியூபருக்கு ஷாக்
சென்னை: கேரளாவில் இன்ஸ்டாகிராம் இன்ஸ்ப்ளூயன்ஸரான அகிலின் மனைவி மேகா வீட்டை விட்டு வெளியேறி சென்ற சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.. மாதம் 10 லட்சம் சம்பாதிக்கும் கணவனை விட்டுவிட்டு, நள்ளிரவில் துணி மூட்டைகளுடன், மேகா நைட்டியுடன் கிளம்பி சென்ற சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகியவண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "இன்று கேரளாவில் அகில் - மேகா சம்பவத்தைப் பற்றித்தான் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மாதம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்து, காதலித்து அமர்க்களமாக திருமணமும் செய்து, மேல் படிப்பிற்காக பஸ்ஸில் அனுப்பி வைத்தால், அந்த பெண் பஸ் டிரைவருடன் சென்றுவிட்டாள். உண்மையிலேயே அகில் மிகவும் பாவம்.. தன்னம்பிக்கையுடன் இருங்கள் என்று அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
கேரளா ரீல்ஸ் தம்பதி
சில பெண்கள் ஏன் இவ்வாறு வேலை ஆட்களுடனோ அல்லது டிரைவர்களுடனோ செல்கிறார்கள் என்று பார்த்தால், இதை தொழிலை வைத்து நான் சொல்லவில்லை..
MD எனப்படும் நிறுவனத்தின் தலைவருடன் இருக்கும் உதவியாளர்கள், வீட்டில் இருக்கும் டிரைவர்கள் எப்போதும் கூடவே இருக்கும்போது ஒரு புரிதல் ஏற்பட்டுவிடுகிறது. அதேபோல இன்னொரு முக்கியமான காரணம் சில பெண்கள், தங்களையே தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.
அல்லும் பகலும் உழைக்கும் கணவன்
கணவன் பெரிய தொழிலதிபராகவோ, டாக்டராகவோ, பேராசிரியராகவோ இருப்பார்.. இதனால் அந்த கணவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்... குடும்பத்தைக் காப்பாற்றவும், மனைவியை நன்றாக வைத்துக்கொள்ளவும்தான் அந்த கணவன் இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால், சில பெண்களோ இதை புரிந்து கொள்ளாமல், கணவன் தன்னை எப்போதுமே தாங்கி பிடிக்க வேண்டும், தன்னை கவனித்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விடுகிறார்கள்..
ஆனால், மேற்கூறிய பணிவிடைகளை எல்லாம் சில டிரைவர்கள் செய்வார்கள்.. கூலிக்கு வேலை செய்பவர் என்பதால் அத்தகையை பணிகளை நிச்சயம் செய்வார்கள்.. இந்த பெண்களும், அதையெல்லாம் உண்மையிலேயே கவனிப்பு என நினைத்து ஏமாந்துவிடுகிறார்கள்.
நைட்டியுடன் ஓடிப்போவதா
கணவனை பிடிக்கவில்லை என்றால், சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும்... சட்டத்தில் என்ன இடம் இருக்கிறதோ அதன்படி விவாகரத்து செய்துவிட்டுப் போனால் யாரும் கேட்கப்போவதில்லையே.. அதை விட்டுவிட்டு, நள்ளிரவில் கணவன் தூங்கும்போது, நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடுவது எந்த வகையில் நியாயம்? சிசிடிவி காட்சிகளில் நைட்டியுடன் செல்வது பதிவாகி உள்ளது.
கேரளாவில் வீடுகள் தனித்தனியாகத் தள்ளி இருப்பதால், மக்கள் தனிமையில் வாழப் பழகியிருக்கிறார்கள். பெண்களுக்குத் தனிமை அதிகமாகும்போது இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். கே.எஃப்.சி, ஸ்டார்பக்ஸ் என்று ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு பெண், இன்று ஒரு சாதாரண டிரைவருடன் சென்றிருக்கிறார்.. அந்த டிரைவர் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படியிருக்கும்போது இந்த பெண்ணால் அவருடன் எப்படி வாழ முடியும்?
தியாகம் செய்த அகில்
இவர்கள் இருவரின் வாழ்வியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொருத்தம் இல்லாத இந்த அவசர முடிவால் இருவரின் வாழ்க்கையுமே நாசமாகத்தான் போகும். இன்னும் 6 மாதத்திற்குள் இதுபோன்ற ஆரம்பிக்கும் வாழ்வு, முறிந்துபோய்விடும். ஒன்று கொலையில் போய் முடியும், அல்லது அப்படி ஓடிப்போகும் பெண்கள் மீண்டும் மனம் வருந்தி, திரும்பிவந்துவிடுவார்கள்..
இருந்தாலும், உண்மையிலேயே காதலித்து, படிக்க வைத்து, தியாகம் செய்த அகிலின் வாழ்க்கையை, மனைவி செய்த காரியம் முற்றிலும் பாழாக்கிவிட்டது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
