மணிப்பூர் கலவரத்திற்கு பின்னணியில் பாஜக ஆதரவு அமைப்புகள்.. திமுகவின் முரசொலி குற்றச்சாட்டு!
சென்னை: மணிப்பூரில் குகி கிறிஸ்துவ பழங்குடிகள் மீதான வன்முறையை தூண்டியதே பாஜக அரசுதான் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் விமர்சித்து உள்ளது.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, "எரியும் மணிப்பூர் தீயை ஏன் அணைக்கவில்லை என்று பா.ஜ.க. மீது கேள்வி எழுப்பப்படுகிறது. நியாயமான கேள்விதான். மணிப்பூர் மாநிலத்தை ஆள்வதும் பா.ஜ.க. ஒன்றியத்தை ஆள்வதும் பா.ஜ.க. அவர்கள் தான் அந்தத் தீயை அணைக்க வேண்டும். மே 4 ஆம் தேதி தொடங்கிய பிரச்சினையை சூலை மாதக் கடைசி வரைக்கும் அவர்களால் ஏன் அடக்க முடியவில்லை? எதனால் என்றால்... அதை - அந்தப் பிரச்சினையை உருவாக்கியதே அவர்கள்தான்.

இங்கு வாழும் 53 விழுக்காடு மக்கள் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் மலைப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். 'மைத்தி' மக்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி பழங்குடியினர் சிறுபான்மை கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்கள். குக்கி பழங்குடியின மக்களுக்கு தரப்பட்டுள்ள உரிமையை மைத்தி இன மக்கள் கேட்கிறார்கள்.
இதனை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்கிறது. மைத்தி இன மக்களை பழங்குடியினராக சேர்ப்பது குறித்து மாநில அரசு நான்கு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மணிப்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19 அன்று தீர்ப்பளிக்கிறது. தனது முடிவை மாநில அரசு எடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
ஏற்கனவே அனைத்து வசதிகளையும் அடைந்து வரும் மைத்திகளுக்கு பழங்குடியின சலுகையும் கொடுத்தால் இதில் உள்ள இடங்களையும் அவர்களே அடைவார்கள் என்று குக்கி மக்கள் பயந்தார்கள். எனவே. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கினார்கள். ஏப்ரல் 23 அன்று வேலைநிறுத்தம் நடந்தது.
மே 3 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்தினார்கள் குக்கி இன மக்கள். 'மைத்தி இனப்பெண்ணை குக்கி பழங்குடியினர் பாலியல் வன்கொடுமை செய்ததாக' வதந்தி கிளப்பினார்கள். அதன் பிறகு வன்முறை வெடிக்கத் தொடங்கியது.
மொத்தமுள்ள 60 உறுப்பினர் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் 40 உறுப்பினர் கொண்ட தொகுதிகளில் மைத்தி இன மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தனது அரசியல் லாபங்களுக்காக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கிறது பா.ஜ.க. ஆய்வாளர் கார்த்திக் புகழேந்தி இதுகுறித்த பல்வேறு தகவல்களை விரிவாக எழுதி இருக்கிறார்....
"மணிப்பூரின் இரு இனக் குழுக்களுக்கு இடையே பரப்பிவிடப்பட்ட இந்த வெறுப்பரசியல், வன்முறை, கலவரங்களுக்குப் பின்னால் நீதிமன்ற உத்தரவு மட்டுமல்ல... மதம், அரசியல், பொருளாதார வளச் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன. 2022-ல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில். பா.ஜ.க. 32 இடங்களில் வென்றது. அவற்றில் இம்பால் (17). பிஷ்னுபூர் (4) சுரசந்த்பூர்(3). சந்தேல் (2) ஆகிய பா.ஜ.க. வென்ற தொகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் மைத்திகள்.
300 ஆண்டுகள் பழமையான மைத்திகளின் "சனமகி" பண்பாடும். மத சம்பிரதாயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கிறது. இதனால். பெரும்பான்மை மைத்திகள் மீது அக்கறை காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு சிறுபான்மையினரான கிறிஸ்தவ குக்கி பழங்குடிகளை அவர்களுக்கு நேரெதிராக நிறுத்தும் அரசியல் அங்கு பா.ஜ.க. வுக்குப் பலனளித்திருக்கிறது.
இதற்காக. மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மைத்திகள் தரப்பிலான கோரிக்கை முதன்மைபடுத்தப்படுகிறது. இது பழங்குடியினரை சமவெளிகளில் இருந்து வெளியேற்றுவதற்கான மறைமுகக் குரல்தான். ஒருபுறம், காட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்களின் வீடு, கட்டடங்களை இடிக்கும் பணிகளையும் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது.
மறுபுறம், சட்டமீறல்களுடன் மலைப் பகுதியில் பழங்குடியினர் அல்லாதவர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, அண்டை நாடுகளிலிருந்து குக்கி இனப் பழங்குடிகள் மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும், அவர்களை உள்ளூர் குக்கி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரம் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரிலும் அரம்பை தெங்கால், மைத்தி - லீபன் உள்ளிட்ட சில பாசிச பா.ஜ.க.வின் ஆசிபெற்ற அமைப்புகளே இந்த வன்முறையினை முன்னின்று நடத்தியிருக்கின்றன. நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி இருசக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்று, காவல் நிலையங்களைச் சூறையாடி. குக்கி பழங்குடி கிராமங்களில் புகுந்து, அவர்களின் வீடுகளை. பொருட்களை, பெண்களை, ஆண்களை நாசம் செய்து கொலைகளில் ஈடுபடுகின்றன.
இந்த அமைப்புகளின் முக்கியக் கொள்கை, மணிப்பூரின் மன்னர் காலத்துப் பண்பாடான "சனமகி" ராஜ்ஜியம் திரும்பவும் வரவேண்டும் என்பதுதான். மணிப்பூர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பறப்பது இவர்களின் சனமகி கொடியே" என்று எழுதி இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி. ஏன் பா.ஜ.க. மவுனம் காக்கிறது என்று தெரிகிறதா?
யாரால்? என்றால் இவர்களால்தான். அதனால்தான் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பது சட்டம் ஒழுங்கு மீறல் அல்ல. பா.ஜ.க. ஆதரவு சக்திகளால் உருவாக்கப்பட்ட சமூகக் குழப்பம் ஆகும். அதனால்தான் வேண்டுமென்றே மவுனம் காக்கிறார்கள். இவர்களது மவுனத்துக்கான பலிகளே அப்பாவி மக்கள். பாசிச பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?" என்று தெரிவித்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications