ஆசிரியராக பணியை தொடங்கி ஆன்மீக குருவாக உயர்ந்த ஆதிபராசக்தி 'அம்மா' பங்காரு அடிகளார்
சென்னை: அம்மா என்று ஆண்களை அழைக்க முடியுமா? பல கோடி பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மீக புரட்சி ஏற்படுத்திய பங்காரு அடிகளால் ஆசிரியராக பணியை தொடங்கி ஆன்மீக குருவாக உயர்ந்தவர். ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளால் 82 வயதில் ஆதிபராசக்தியின் பாதங்களில் சரணடைந்துள்ளார்.
பங்காரு அடிகளார் மூத்த மகனாக 1941 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். கோபால நாயக்கர் மற்றும் திருமதி. மீனாட்சி அம்மாள்.

பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி. சிறுவயதிலிருந்தே, ஆன்மீக எண்ணங்களை கொண்டிருந்தவர் பங்காரு அடிகளார். பாம்பாகி வந்தவளே என்று சொல்வார்கள். சிறுவயதிலேயே அவர் உறங்கும் போது பாம்பு காவல் காத்தது என்று சொல்வார்கள். சிறுவயதிலே பங்காரு அடிகளாரை ஆன்மீகம் ஆட்கொண்டது.
அடிகளார் தனது பள்ளிப் படிப்பை சோத்துப்பாக்கத்திலும், உயர்நிலைப் பள்ளியை அச்சரப்பாக்கத்திலும் தொடர்ந்தார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சிக்குப் பிறகு அச்சரப்பாக்கம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆசிரியராக பணியாற்றினாலும் அவரது எண்ணம் முழுவதுமே ஆன்மீகத்தை சுற்றித்தான் இருந்தது. ஆன்மீக பணி செய்தாலும் இல்லறத்தில் துறவறம் என்பது போல 1968 ஆம் ஆண்டு லட்சுமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
35 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருக்கிறது. ஆதிபராசத்தி ஆலயம் ஒரு வேப்பமரத்தின் கீழ் இருந்தது, 1966 புயலில் அந்த வேப்ப மரம் விழுந்தது, அங்கிருந்து சுயம்பு விக்கிரகம் கிடைத்தது. மேல்மருவத்தூரில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து குறி சொல்லி வந்தார். சிறு கொட்டகை அமைத்து ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்க, சில ஆண்டுகளில் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஆதிபராசக்தி திரைப்படம் சித்தர் பீடத்தை பற்றியும் பங்காரு அடிகளாரைப்பற்றியும் பலரையும் அறிய வைத்தது. மேல் மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார்.
அவரது ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும் அதிகளவில் பங்கெடுக்க வைத்தவர் பங்காரு அடிகளார். மேல்மருத்துவர் சித்தர் பீடம், பெண்களை மையப்படுத்தி ஒரு அமைப்பை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அங்கு எல்லோரும் பெண்களே.
கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியதும் மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது மிகப் பெரிய சமயப் புரட்சி.
உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு அடிகளார். ஏழை எளிய மக்களும் கருவறை வரை சென்று வர முடியும் என்று நிரூபித்தவர்.அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அந்த ஆதிபராசக்தியின் பாதங்களில் சரணடைந்துள்ளார்.
பங்காரு அடிகளார் ஆன்மீக குருவாக மட்டுமின்றி ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர். ஆதிபராசக்தி அறக்கட்டளைவுக்கு சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஏராளமான சொத்துக்களும் உள்ளன. மேல்மருத்துவத்தூர் கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் மாலை அணிந்து விரதமிருந்து ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவு பல கோடி பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications