சென்னை திநகர் மசாஜ் சென்டரில் தலைதெறிக்க ஓடிய ஆண்கள்.. பெண் ஒருவர் செய்த காரியத்தால் பரபரப்பு
சென்னை: தியாகராய நகரில் சட்டவிரோதமாக செயல்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது சோதனையின் போது போலீசாருக்கு பயந்து 2 வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம் பெண், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே போலீசை கண்டதும் அங்கிருந்த ஆண்கள் தலைதெறிக்க ஓடினார்கள்
சென்னையில் வெளியூர்களிலிருந்து மற்றும் வெளிமாநிலங்களில் வேலைத் தேடி சென்னைக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைக்கும் விபச்சார கும்பல், அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வலையில் வீழ்த்துகிறார்கள்.

அப்படி அழைத்து செல்லும் விபச்சார கும்பலைச் சேர்ந்தவர்கள், சிலரை மிரட்டியும், சிலருக்கு பண ஆசை காட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அப்படி விபச்சார வலையில் சிக்குவோர், தொடர்ந்து அதே தொழிலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்..
இப்படி கட்டாயப்படுத்தி பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் புரோக்கர்களை அடிக்கடி ரெய்டு நடத்திய போலீசார் கைது செய்கிறார்க்ள்- சென்னையில் விபச்சாரத்தை தடுக்க தனிப்படை போலீசார் இருக்கிறார்கள். இவர்கள் விபச்சார கும்பல்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் போலீசார் என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், குடும்பமாக வாழ்ந்து விபச்சாரம் செய்வது, அலுவலகம் அமைத்து ஆபிஸ் என்ற பெயரில் விபச்சாரம் செய்வது, ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்வது , மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்வத தொடர்கிறது. இப்படி போலீஸை ஏமாற்றும் இடைத்தரகர்கள் கடைசியில் ரெய்டின் போது தான் சிக்குகிறார்கள்.
அப்படித்தான் வடமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார், தியாகராய நகரில் இன்று சோதனை நடத்தினார்கள். அப்போது போலீசாரை கண்டதும், பெண்களும், ஆண்களும் தப்பித்து ஓட முயன்றார்கள். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றார்கள். அப்போது, சிலர் போலீசாரிடம் இருந்து லாவகமாக ஏறி குதித்து தப்பி ஓடினார்கள்.
அதேநேரம் சிக்கிய அனைவரையும் போலீசார் வாகனத்தை ஏற்றிக்கொண்டு விசாரணைக்கு அழைத்த சென்றனர். இந்நிலையில் சோதனையின் போது போலீசாருக்கு பயந்து 2 வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம் பெண், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்கள் தப்பி ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications