புதுசு புதுசா வருதே.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டா கொடுத்துள்ள 'டபுள்' செக்யூரிட்டி! மாஸ் அப்டேட்
சென்னை: வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை கொடுத்து வரும் நிலையில், தற்போது சாட் லாக் எனும் மற்றொரு அப்டேட்டை வழங்க ரெடியாகி வருகிறது.
தகவல் பரிமாற்றத்திற்கு எத்தனையோ செயலிகள் இருப்பினும், வாட்ஸ்அப் செயலிதான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. காரணம் இதில் வழங்கப்படும் அப்டேட்கள்தான். கடந்த 2009ம் ஆண்டு யாகூவால் உருவாக்கப்பட்ட இந்த வாட்ஸ்அப் செயலியை 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இந்த காலக்கட்டத்தில் ஆன்டிராய்டு மொபைல்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இதற்கு முன்னர் வரை குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் எனில் எஸ்எம்எஸ்தான் பயன்பாட்டில் இருந்து. இந்த நிலையை மாற்றியது வாட்ஸ்அப்தான் என்றால் அது மிகையாகாது.

முதலில் சேட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், GIF ஃபைல், போட்டோ, வீடியோ என இருந்தது பின்னர் டாக்குமென்ட், கான்டாக்ட், லைவ் லொகேஷன் மற்றும் பணப்பரிமாற்ற வசதி போன்றவற்றை வாட்ஸ்அப் அப்டேட் கொடுத்தது. இவ்வளவும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இப்படிதான் தனக்கான இடத்தை வாட்ஸ்அப் தக்க வைத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து மேலும் பல புது புது அப்டேட்களை வாட்ஸ்அப் கொடுத்து வருகிறது.
குரூப் சேட்டிங், அதில் அட்மின் மட்டும் மெசேஜ் போடுவது, யார் மெஸேஜ் போட்டாலும் அதை அட்மின் நீக்கும் அதிகாரம் என பல சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் கொடுத்து வருகிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக சாட் லாக் எனும் புதிய அம்சத்தையும் கொடுத்திருக்கிறது. அதாவது நாம் யாருக்காவது சாட் செய்கிறோம் எனில் அந்த சாட்டிங்கை நம்மால் தனியாக லாக் செய்ய முடியும். இப்படி செய்வதன் மூலம் நமது போனை யாராவது பயன்படுத்தினால் கூட லாக் செய்யப்பட்ட நபருக்கு நாம் என்ன மெசேஜ் அனுப்பினோம் என்பதை பார்க்க முடியாது.
இதில் ஸ்பெஷல் என்னவெனில் இப்படி லாக் சேட் செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் போட்டோ, வீடியோ போன்றவை தானாக மொபைல் கேலரியில் save ஆகாது. இதனை நாம் டவுன்லோடு செய்து சேவ் கொடுத்தால்தான் அது மொபைலில் இருக்கும். எனவே இந்த எண்ணிலிருந்து வேறு ஏதேனும் மெசேஜ் வரும்போது மொபைல் உங்களிடம் இல்லையெனில் நீங்கள் கவலையடைய வேண்டியதில்லை. இப்படி லாக் செய்யப்பட்ட அகவுன்ட்டை ஓபன் செய்ய வேண்டும் எனில் நீங்கள் செல்போனில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் பாஸ்வேர்டையோ, அல்லது கைவிரல் ரேகையையோ பயன்படுத்த வேண்டும்.

தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருகிறது. இது அவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை பொறுத்து விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான வாட்ஸ்அப் இதுபோன்ற சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி கெத்துக்காட்டிக்கொண்டிருந்தாலும், இதில் சில குறைபாடுகள் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கிறது.
அதாவது சமீபத்தில் ட்விட்டர் பொறியாளர் ஒருவர் இரவில் தனது மொபைலில் மைக்ரோஃபோனை கனெக்ட் செய்துவிட்டு தூங்கியிருக்கிறார். ஆனால் அன்று இரவு இவருடைய அனுமதியில்லாமல் மைக்ரோஃபோன் இயங்க தொடங்கியுள்ளது. இது அப்பட்டமான தனியுரிமை மீறலாகும். இதே இரவு நேரமாக இருந்ததால் பிரச்னையில்லை. ஆனால் பகல் நேரங்களில் ஏதாவது ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போது இதுபோன்று மைக்ரோஃபோன் தன்னிச்சையாக இயங்கி இருந்தால் அந்த மீட்டிங்கில் பகிரப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும்.

இதற்கு வாட்ஸ்அப் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் கூட இந்த பிரச்னை நீடித்து வருவதாக மேலும் சிலர் கூறியுள்ளனர். எனவே இதுபோன்ற சில முக்கிய பிரச்னைகளையும் வாட்ஸ்அப் களைய வேண்டும் என்று பயனாளர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications