இனி ஏஐதான் எல்லாமே.. ஊழியர்களுக்கு மெட்டா நிறுவனம் முக்கிய உத்தரவு.. அடித்து ஆடும் மார்க்
சென்னை: மெட்டா நிறுவனம், அதன் ஊழியர்களின் செயல்திறனை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுடன் இணைத்து மதிப்பிடத் தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு முதல், ஊழியர்கள் AI-ஐப் பயன்படுத்தி எந்த அளவுக்குப் வேலை செய்கிறார்கள், பணிகளில் வேகத்தை காட்டுகிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமையும். இது AI-ஐ Meta நிறுவன கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக மாற்றும் மெட்டாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மெட்டாவின் மனிதவளப் பிரிவின் தலைவர் ஜனல் கேல், இந்த புதிய நடைமுறை குறித்து ஊழியர்களுக்கு ஒரு மெயிலில் தெரிவித்துள்ளார். ஒரு ஊழியர் எவ்வளவு ஏஐ பயன்படுத்துகிறார், அவர் அதை எப்படி பயன்படுத்துகிறார், அவரின் பணிகளில் ஏஐ எப்படி செயலாற்றும் என்பதை பொறுத்து இந்த முடிவுகள் எடுக்கப்படும். அவர்கள் ஏஐ பயன்படுத்தும் முறையை வைத்து அவர்களுக்கு ரிவ்யூ வழங்கப்படும். பர்பார்மன்ஸ் ரிவ்யூ வழங்கப்படும்.

ஏஐக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மெட்டா
ஊழியர்கள் AI-ஐ எவ்வாறு பயன்படுத்தி முடிவுகளை வழங்குகிறார்கள், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் கருவிகளை உருவாக்குகிறார்கள் என்பது மதிப்பீட்டின் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த மாற்றம், கார்ப்பரேட் உலகில் AI-ஐ மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை நோக்கிய ஒரு பெரிய நகர்வைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டின் செயல்திறன் மதிப்பீடுகளில் தனிப்பட்ட AI பயன்பாட்டு அளவீடுகள் நேரடியாக சேர்க்கப்படாது. இருப்பினும், ஊழியர்கள் தாங்கள் AI-ஐப் பயன்படுத்தி அடைந்த சாதனைகளை சுய மதிப்பீடுகளில் குறிப்பிடலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மெட்டா நிறுவனம் தனது 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' பிரிவில் பணியாற்றுவதற்காக, புதிய உறுப்பினர்களுக்கு அதிகஅளவு சம்பளத்தை வழங்க முன் வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த பொறியாளர் ஒருவருக்கு, இந்த திட்டத்தின் கீழ் $200 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.
அடித்து ஆடும் மார்க் ஜுக்கர்பெர்க்
உலகின் டாப் 11 மூளைகளை மெட்டா நிறுவனம் பணிக்கு எடுத்துள்ளது. தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் தலைசிறந்த 11 மேதைகளைத் பணிக்கு எடுத்துள்ளது.
இவர்கள் மூலம் 'மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்' என்ற புதிய உயரடுக்கு பிரிவை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதனைப் போலவே சிந்திக்கவும், பகுத்தறியவும், பதிலளிக்கவும் கூடிய திறனை இது கொண்டிருக்கும். அதாவது ஓபன் ஏஐ, ஜெமினி போன்ற ஏஐக்கு சவால் விடும் வகையில், அதை விட சிறப்பாக, அதிக ஆற்றல் கொண்ட ஏஐயை இவர்கள் உருவாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
20 மில்லியன் டாலர் சம்பளம்
மெட்டா நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ருவோமிங் பாங்கை தனது புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவில் சேர்ப்பதற்காக 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது அவருக்கு ஆண்டு வருமானம் 1.7 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதாவது மாத வருமானம் 150 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறமையானவர்களை ஈர்ப்பதற்கான மெட்டாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.
மெட்டா நிறுவனம், ருவோமிங் பாங்கை பணியில் அமர்த்தியதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது இருப்பை உறுதி செய்துள்ளது. இது, தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. AI நிபுணர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ₹66 கோடி முதல் ₹165 கோடி வரை (சுமார் $8 மில்லியன் முதல் $20 மில்லியன் வரை) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ₹830 கோடி ($100 மில்லியன்) வரை முதல் - நாள் போனஸாக வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OpenAI, Google DeepMind மற்றும் Anthropic போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் தயாராகி வருவதால், தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இதில் இறங்கி அடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications