சுள்ளென்று அடித்த வெயில்..ஜில்லென்று இடியுடன் கொட்டிய மழை..சட்டென்று மாறிய வானிலை
சென்னை: சுள்ளென்று அடித்த வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. பிற்பகல் நேரத்தில் கருமேகங்கள் கூடி திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காற்று வீசி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பல ஊர்களில் அவ்வப்போது பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் டி.கல்லுப்பட்டி, டி.குண்ணத்தூர் பகுதிகளிலும் காலை முதலே வெயில் சுள்ளென்று அடித்தது. திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழையாக கொட்டித்தீர்த்தது.
மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குற்றாலம், மணல்மேடு, சித்தர்காடு, கோமல், உளுந்துகுப்பை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதே போல தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குற்றாலத்தில் வீசிய அனல் காற்றுக்கு இதமாக பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications