தனியாரில் ரூ.70க்கு விற்கும் சர்க்கரை மாத்திரை.. இனி ரூ.11 மட்டுமே.. சொல்கிறார் திமுக எம்எல்ஏ எழிலன்
சென்னை: தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் சர்ச்சரை மாத்திரைகள், நாளை தொடங்கி வைக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கு கிடைக்கும் என்று திமுக எல்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக 75 முதல் 50 சதவிகிதம் வரை மக்கள் தங்கள் மருத்துவ செலவுகளை சேமிக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விண்ணங்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக பிப்.24ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் சுமார் 33 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவும், மருத்துவருமான எழிலன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வரின் மருந்தகம் என்ற திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்படவுள்ளது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் கடுமையான பாதிப்பில் இருக்கிறார்கள்.
ரத்த கொதிப்பு, இருதய பலவீனம் உள்ளிட்ட பாதிப்புகளால் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அதிக தொகை செலவு செய்யப்படுகிறது. அதனை குறைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக தொழில்முனைவோருக்கும் சாதகம் ஏற்பட்டுள்ளது. மருந்துக் கடைகளில் மருந்து வாங்கும் போது மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது. இந்த மருந்தகத்தில் 75 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருந்துகள் குறைக்கப்படாது.
அங்கும் மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும். இந்த திட்டம் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கவே தொடங்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்க்கான METFORMIN மாத்திரை (30 மாத்திரையில் அடங்கிய ஒரு ஸ்ட்ரிப்) தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கும், மத்திய அரசின் பிஎம்பிஜேகே மருந்தகங்களில் ரூ.30க்கும், தமிழக அரசின் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கும் கிடைக்கும்.
இதுதான் வித்தியாசமாக இருக்கிறது. இதன் மூலமாக மாதம் மாதம் மாத்திரைகளுக்கு செலவு செய்யும் தொகை மக்களுக்கு குறையும். கிட்டத்தட்ட 75 முதல் 50 சதவிகிதம் வரையிலான மருந்துகள் செலவு மக்களுக்கு சேமிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications