இன்னும் ஒரு மாசம் தான்.. சென்னை சென்ட்ரலில் மகிழ்ச்சியோடு போகலாம்.. மெட்ரோ சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,பார்க் ரயில் நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என எல்லாமே ஒரே இடத்தில் அமைந்துள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையும் சாலையின் எதிர் எதிரே அமைந்துள்ளன. இதில் சாலையை கடக்க வேண்டும் எனில் சுற்றித்தான் வர வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் பார்க் ஸ்டேசனுக்கான சுரங்கப்பாதையை பயன்படுத்தி கடந்து சென்று ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வர முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஒவ்வொரு நிலையும் ஒரு சில நாட்களே தேவைப்படுவதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும் எனறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் வசதிக்காக சுரங்கப்பாதையில் நகரும் படிக்கட்டு, மின் தூக்கி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே சென்ட்ரல் சதுக்கத்தில் பிரம்மாண்ட 27 மாடி கட்டிடம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கு வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்த பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள், வரும் காலத்தில், வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்த மெகா கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 8 நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான வாகன நிறுத்துமிடம் தயாராக இருக்கிறது. இதில் 1,500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,900 வாகனங்கள் நிறுத்த முடியும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications