சென்னையில் இந்த ரூட்டுல மட்டும் போயிடாதீங்க.. நாளை முதல் டிசம்பர் 1 வரை இதுதான் ரூட்.. முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழில் என பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் வரப்பிரசாதமாக உள்ளது.

எந்தவொரு பகுதிகளுக்கும் எளிமையாகவும், விரைவாகவும் செல்ல மெட்ரோ ரயில் சிறந்த சாய்ஸாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. மெட்ரோ ரயிலில் ஒருநாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வர நகரப் பேருந்துகளைப் போல, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இதற்காக மெட்ரோ ரயிலின் இரண்டம் கட்ட விரிவாக்க பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்படவுள்ளதையொட்டி, கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றங்களும் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது மீண்டும் சென்னையில் இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. மெட்ரோ கட்டுமான பணிக்காக இன்று முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற நவம்பர் 25 முதல் 1 ஆம் தேதி வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன.
மாறாக, அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம். உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications