போர்க்கால ஒத்திகைக்கு உத்தரவிடப்பட்டது ஏன்? நாளை என்னவெல்லாம் நடக்கும்! முழு விவரம்
சென்னை: பாகிஸ்தானுடன் உரசல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளை போர்க்கால ஒத்திகையை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவுக்கான காரணம் என்ன? நாளை என்னவெல்லாம் நடக்கும்? என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் இந்த போர்க்கால ஒத்திகைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நாளை நடக்கிறது. ஒத்திகையின்போது வான்வழித்தாக்குதலுக்கான எச்சரிக்கை அமைப்புகள் சரியாக செயல்படுகின்றனவா? என்பது பரிசோதிக்கப்படும். இந்திய விமானப்படையுடன் தொடர்பு கொள்ள பயன்படும் ஹாட்லைன் மற்றும் ரேடியோ இணைப்புகள் சோதனை செய்யப்படும். கட்டுப்பாட்டு அறைகளும், அதற்கு மாற்றாக இருக்கும் மாற்று கட்டுப்பாட்டு அறைகளும் சரியாக செயல்படுகிறதா? என்பது உறுதி செய்யப்படும்.
பொதுமக்கள், மாணவர்கள் என அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளித்தல், வான் வழி தாக்குதல் சமயத்தில் மின்சாரத்தை துண்டித்து எதிரிகளை குழப்புதல் ஆகியவை இந்த ஒத்திகையின்போது செய்து பார்க்கப்படும். தவிர முக்கிய உற்பத்தி மையங்கள், உதாரணத்திற்கு ஆவடியில் உள்ள டேங்க் தயாரிப்பு தொழிற்சாலையை மறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலையை மறைப்பது எனில், ஒரு போர்வையை போட்டு மறைப்பது கிடையாது.
இரவு நேரத்தில் உண்மையான தொழிற்சாலையில் மின்சாரத்தை அணைத்துவிட்டு, அதற்கு பதில், அருகில் உள்ள வேறு ஒரு பகுதியில் தொழிற்சாலை போன்று விளக்குகளை பிரகாசமாக எரிய விடுவார்கள். இப்படி நடப்பதன் மூலம் வான் வழி தாக்குதலின்போது குழப்பம் ஏற்பட்டு, உண்மையான தொழிற்சாலை காப்பாற்றப்படும்.
அதேபோல தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு துறை, இதர பாதுகாப்பு சேவைகள் சரியாக செயல்படுகிறதா? என்றும், ஓரிடத்திலிருந்து அவசரமாக மக்களை வெளியேற்ற வேண்டும் எனில் அது சரியாக திட்டமிட்டபடி செய்யப்படுகிறதா? என்றும் நாளை சோதனை செய்து பார்க்கப்படும்.
போர் பற்றி மாவட்ட, மாநில அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த, தாக்குதலுக்கு எதிராக எந்த அளவுக்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள, போர் முன்னெச்சரிக்கையை ஏற்படுத்த இந்த ஒத்திகை பயன்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியல் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது. இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் உதவி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
பதிலுக்கு பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை அது, இது என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது. இந்த சூழலில்தான் நாளை நாடு தழுவிய போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications