இந்தியாவில் முதன்முறை.. தமிழ்நாடு No 1.. மைக்ரோசாஃப்ட் அதிகாரி பெருமிதம்
சென்னை: பல திட்டங்களுக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி. அந்தப் பட்டியலில் புதியதாக இணைந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
கடந்த ஜூலை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு கல்வித்துறை மேம்பாட்டிற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் போட்டுள்ளது என்ற இனிப்பான செய்தியைப் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

அதன்படி Technical Education and Learning Support (TEALS) என்ற திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இதற்காக முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
அப்போது இந்தச் சிறப்பான அறிவிப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின், "தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணியில் ஈடுபடும் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுகள். கல்வியில் சிறந்த தமிழர் எனப் பார் போற்றப் பாடுபடுவோம்" என்றும் தெரிவித்திருந்தார்.

இப்போது அந்தத் திட்டம் எப்படி செயல்வடிவம் பெற உள்ளது என்பதைப் பற்றி முதன்முறையாக Microsoft data Artificial intelligence இயக்குநர் செசில் சுந்தர் விளக்கம் அளித்திருக்கிறார்.
"இந்தத் திட்டத்தின் மீது எனக்குத் தனிப்பட்ட வகையில் ஆர்வம் அதிகம். இத்திட்டம் மூலம் தமிழ்நாடு அரசு ஒரு அற்புதமான முயற்சியை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் அனைத்து அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு ஏஐ தொழில்நுட்ப கல்வியை ஒரு பாடமாகப் போதிக்க உள்ளது.

இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அட்வான்ஸ் டெக்னாலஜிதான் ஏஐ என்பது.
அதை அப்படியே நாங்கள் அரசுப் பள்ளி குழந்தைகளுக்குச் சொல்லித் தர இருக்கிறோம். இது ஏதோ தமிழ்நாடு அரசு ஏஐ தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கிறது என்று எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சொல்லப்போனால், இந்தியாவிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையும் அதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆற்றலும் உள்ள ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு அரசுதான் முன்னோடியாக இருக்கிறது. இது ஒரு பெருமையான விசயம்.
இதை எப்படி நாம் கொண்டு போகப்போகிறோம் என்றால், கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பைத் தருவது என்பது ஒரு பகுதியாக இதில் உள்ளது. அது மட்டுமல்லாமல், மேற்கொண்டு ஐந்து லெவல் மேலே சென்று பலவற்றை மாணவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்.

Artificial intelligence சாந்த அடித்தளத்தையும் ரோபோடிக் சார்ந்த தொழில்நுட்ப அறிவையும் வலுவாவ அடித்தளமாக அவர்களின் கல்வி அறிவில் இடம்பெற வைக்கப் போகிறோம். இதற்கான திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களையும் என்.ஜி.ஒக்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க இருக்க இருக்கிறோம்.
இப்படியான பாடத்தை அரசுப் பள்ளி குழந்தைகளுக்குக் கற்றுத்தருவது அவர்களின் நன்மைக்காக மட்டும் அல்ல. நமது எதிர்கால நன்மைக்கும் இது பயன்படும். வளரும்போது அந்தக் குழந்தைகள் ஏஐ பற்றிய அடிப்படை அறிவுடன் வளர்க்கப்படுவர்.
மேலும் அவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் போது அவர்களால் இன்னும் திறமை வாய்ந்த தொழில்நுட்பங்களை மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். இந்த மாதிரியான கல்வி, தமிழ்நாட்டில் வரும் காலத்தில் மாபெரும் தொழில்நுட்ப புரட்சியை உண்டாக்கும்.

அத்தோடு, அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது இதில் மிகமிக முக்கியம். அவர்களின் பெற்றோர் மிகச் சாதாரண பொருளாதார பின்புலத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களால் இத்தனை வசதியான படிப்பைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர முடியாது. அதைத்தான் அரசு மிக எளிதாக அவர்களுக்குத் தந்ததுள்ளது.
ஒரு அரசுப் பள்ளி மாணவனாக மட்டுமல்ல; ஒரு பெற்றோராகவும் இது மிகச் சிறப்பான விசயம். ஒரு குழந்தையானது 6 ஆம் வகுப்பு முதல் Artificial intelligence என்ற பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கும். முதலில் அந்தக் குழந்தைக்குக் குறிப்பிட்ட தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
அப்புறம் அதன் கற்றலை உயர்த்தும். அதன்பிறகு திறமையை அது அதிகப்படுத்தும். இதைப்படியாக நாம் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க கொடுக்க அவர்களின் கிரியேட்டிவிடியின் அளவு அதிகமாகும். ஏதோ ஒரு பக்கமாக மட்டும் அவர்களின் ஆர்வம் குவியாமல் பல துறைகள் நோக்கி அறிவும் விசாலமாகும்.
இதில் இன்னும் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், தனியார் பள்ளி குழந்தைக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைக்குமான அறிவு ரீதியான இடைவெளி மிக அதிக அளவில் குறையும்.

எதிர்காலத்தில் இந்தத் தலைமுறை குழந்தைகளிடம் இருந்து ஒரு சுந்தர் பிச்சையோ அல்லது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒருவர் உருவாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. இன்றைக்குச் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய சாதனைப்படைத்த பலர், முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்தான். அதை நாம் எளிதில் மறந்துவிடக்கூடாது.
இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பல சமூகவலைத்தளங்கள் யாவும் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவையாக உள்ளன்.

இதே மாதிரியான ஒரு ஊடகத்தை, எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அவர்களின் ஊர்களிலிருந்து கொண்டே கண்டுபிடித்துச் சாதிக்க முடியும். அதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் 3 அல்லது 4 மடங்கு உயரக் கூடும். இதற்கு எல்லாம் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் படிப்பாக இது கட்டாயம் இருக்கும்" என்கிறார்
அவரிடம் இந்த ஏஐ என்றால் என்ன? எளிய விளக்கம் தாருங்கள் என்றதற்கு அவர், "சுருக்கமாகச் சொன்னால் Artificial intelligence என்பது கணினிக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒரு டிஜிட்டர்ல் மூளை என்று வைத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டரில் உள்ள ஜிபியூ,சிபியூக்களைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உலகத்தையே மாற்றலாம்.

அதைப்போல் உலகப் பொருளாதாரத்தையே மாற்றலாம். அதற்கான வாய்ப்புகள் இதில் உள்ளன.
ஒரு சாதாரண வாழ்க்கையை முன்னேற்றவோ அல்லது மாற்றி அமைப்பதற்கான ஒரு ஐடியா இதில் உள்ளது. இந்த மாற்றம் நடக்க இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்கத் தேவை இல்லை. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த மாற்றத்தை உலகம் சந்திக்க உள்ளது" என்கிறார்
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications