அட்வைஸ்... பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு ட்விட்டரில் டோஸ்விட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர்.
சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜனுடனான தமது சந்திப்பு குறித்து விமர்சித்திருந்த பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு ட்விட்டரில் செம டோஸ்விட்டுள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரது பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
தமிழக நிதி அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்படக் கூடியவர். விமர்சனங்கள் வருமே என்ற தயக்கமே இல்லாமல் மனதில்பட்ட கருத்துகளை தமக்கு சரி எனபட்ட கருத்துகளை வெளிப்படையாக பேசக் கூடியவர்.
இதனால் அவரை மையமாக வைத்து எதிர்க்கட்சியினர் சர்ச்சைகளை கிளப்புவதும் அதற்கு காரசாரமான பதிலடியை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கொடுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் பி.டி.ஆரிடம் இப்போது வாங்கி கட்டி இருக்கிறார் பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் ஆச்சாரி.

சி. ரங்கராஜனுடன் சந்திப்பு
பி.டி.ஆர் தமது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் RBI கவர்னர், MSE தலைவர் மற்றும் 2020ம் ஆண்டின் தமிழக பொருளாதார சீரமைப்பு உயர்மட்ட குழு முன்னாள் தலைவர் சி.ரங்கராஜன் அவர்கள் பல கருத்துகளை பகிர்ந்துகொண்டதோடு சில கோரிக்கைகளை முன்வைத்தார். எங்கள் குடும்பத்துடன் என் தாத்தா காலம் முதல் கொண்ட நட்பை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார் என பதிவிட்டு அவருடன் உரையாடும் படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அட்வைஸ் ஆச்சாரி
இதற்கு கமெண்ட் போட்ட பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் ஆச்சாரி, ரங்கராஜன் போன்ற சீனியர்களுக்கு சோபாவில் அமர வைத்து பேசியிருக்க வேண்டும். உங்களுக்கு எதிரான நாற்காலியில் அமர வைத்து இருப்பது நல்ல பழக்கம் அல்ல. பொது அலுவலகங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.

பி.டி.ஆர். பதிலடி
ஆச்சாரியின் இந்த அட்வைஸ்க்கு பதிலடி தந்துள்ளார் பி.டி.ஆர். அவர் தமது பதிலில், தாம் பணிபுரிந்து வந்த அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் ஓடிப்போனவர்... யூதாஸ் நடவடிக்கைகள் (காட்டி கொடுப்புகள்) மூலம் பாஜகவில் இணைந்தவர். கார்ப்பரேட் கவர்னென்ஸில் பி.எச்.டி. பட்டம் வாங்கியவராக காட்டிக் கொள்கிறவர்.. அட்வைஸ் கொடுக்கிறாராம் என கிண்டலடித்துள்ளார். பி.டி.ஆரின் இந்த பொளேர் பதிலடி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

யார் இந்த ஆச்சாரி?
@Surya_BornToWin என்ற நெட்டிசன், வர்ரானுங்க.. எதையாவது உளர்ரானுங்க.. பொளீர்..பொளீர்ன்னு அடிவாங்கறானுங்க.. அப்புறம் வலிக்குதே.. வலிக்குதேன்னு கத்திக்கிட்டே ஓடிப் போயி ஒளிஞ்சிக்கறானுங்க.. என பதிவிட்டுள்ளார். @skthandesh என்ற நெட்டிசன், இவரு @AseerAchary ஆளு யாரு தெரியுமோ.... சசிகலா 2020 ஆகஸ்ட் 14 லேயே... வெளியே வருவாய்ங்க.... திமுக சட்டசபை தேர்தல்ல தோற்கும்னுலாம் ஆருடம் சொன்ன ஆச்சாரி... sorry ஆசாமி... என பதிந்துள்ளார்.

மதுரை அடி
@wordsofAD என்ற ட்வீட்டிஸ்ட், அரசு அலுவலகத்தில் BJP உளவாளியாக இருந்து விட்டு அவசரமாக அப்ரூவராக சாட்சி சொல்றேன் தண்டனை நிச்சயம்னு ஓடிய கோமாளி தான் இந்த ஆச்சாரி என குறிப்பிட்டுள்ளார். @abdulmalik_86 என்ற நெட்டிசன், மதுரைகாரர் அல்லவா அடி ஒன்னும் இடி மாதிரி தான் இருக்கும்... என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications