நள்ளிரவில் அரங்கேறிய அரசியல் வியூகம்.. திருச்சியில் அமித் ஷாவின் மிட் நைட் உத்தரவு.. அப்போ எடப்பாடி?
சென்னை: தமிழக அரசியலில் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அதிரடியாகத் திருச்சிக்கு வருகை தந்தார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளைச் சரி செய்யவும், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் இந்தத் திடீர் பயணம் அமைந்தது.

நள்ளிரவு 12 மணி ஆலோசனைக் கூட்டம்
நேற்று இரவு 11:30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அமித் ஷாவிற்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதிக்கு அவர் சென்றார்.
அமைச்சர் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு பாஜகவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த முக்கியமான சந்திப்பில்:
மத்திய அமைச்சர் எல். முருகன்
மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி
மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணி குறித்த தெளிவான உத்தரவு
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவின் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைப்பதே ஒரே வழி என்பது பாஜகவின் கணக்காக உள்ளது.
கொங்கு மண்டலத்தின் பலமான வாக்கு வங்கியைக் கொண்ட கொங்கு சமூகமும், தென் தமிழகத்தின் தேர்தல் வாக்கரசியலில் முதுகெலும்பாக விளங்கும் முக்குலத்தோர் சமூகமும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை (OPS) மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்குத் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நேற்று ஆலோசனையின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துத் தலைவர்களிடம் கேட்டறிந்த அமித் ஷா, சில முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, கூட்டணிக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசியதாகத் தெரிகிறது.
"தேமுதிக-வை கூட்டணியில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அதிமுக கவனித்துக் கொள்ளும். ஆனால், ஓபிஎஸ் (OPS) தரப்புடனான கூட்டணியை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக இறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கறாராக உத்தரவிட்டார். மேலும், வெறும் பேச்சோடு நிற்காமல், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி, பூத் அளவில் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
காரைக்கால் பயணம் மற்றும் டெல்லி திரும்புதல்
சுமார் இரண்டு மணி நேர தீவிர ஆலோசனைக்குப் பிறகு அதிகாலையில் ஓய்வெடுத்த அமித் ஷா, இன்று காலை விடுதியிலிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தனது காரைக்கால் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை 6 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி திரும்பிய அவர், உடனே தனது தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அமித் ஷாவின் இந்த மின்னல் வேக வருகையும், நள்ளிரவு ஆலோசனையும் தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications