தமிழகத்தில் இந்த 21 மாவட்டங்களில் மழை காத்திருக்கு.. வானிலை மையம் தகவல்! குடையை மறக்காதீங்க மக்களே
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வந்த நிலையில், திடீரென இப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு கடந்த சில காலமாகவே வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் பல இடங்களில் பிப். மாதமே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.
பொதுவாக ஏப்ரல், மே காலத்தில் தான் வெப்பம் சதத்தை அடிக்கும். ஆனால், இந்த முறை அதற்கு முன்னதாகவே வெப்பம் சதமடித்துவிட்டது. ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்கனவே வெப்பம் 100 தாண்டிவிட்டது.

வானிலை
இதனால் மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பிப். மாதமே வெப்பம் அதிகரித்த நிலையில், வெளியே செல்லக் கூட மக்கள் சிரமப்பட்டனர். இந்தாண்டு இப்போது வெப்பம் இந்தளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், வரும் கோடைக் காலத்தில் வெப்பம் மேலும் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல்வேறு காரணங்களால் வெப்பம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மழை
இதற்கிடையே அதிகரிக்கும் வெப்பத்திற்குப் பதில், இதமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இத்தனை நாட்கள் வெயிலில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இது நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. இப்படிப் பெய்யும் மழையால் வெப்பமும் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றும் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்தது. இதனிடையே இன்றும் மழை தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது.

எந்த மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, புதுக்கேட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை மையம்
இது மட்டுமின்றி தென்காசி, நெல்லை, கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீண்ட வெப்பத்திற்கு இடையே, திடீரென வந்த மழை தொடர்வதால் பொதுமக்கள் ஹேப்பியாக உள்ளனர்.

பொதுமக்கள் ஹேப்பி
ஏற்கனவே, நேற்றைய தினம் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல பகுதிகளில் அதிகாலை முதலே நல்ல மழை இருந்தது. இந்தச் சூழலில், இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்ய வெளியே வந்த பொதுமக்கள் சில் கிளைமேட்டை என்ஜாய் செய்து வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications