இவ்ளோ சீப்பா நடந்துகிறாரே.. அதிகாலையில் பைக்கில் வரும் நபர் ஒரு வீட்டு வாசலில் என்ன செய்றாரு பாருங்க
சென்னை: சென்னை முகப்பேரில் பால் பாக்கெட்டுகள் திருடு போகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் கடந்த 28ஆம் தேதி ஒரு பைக்கில் வந்து திருடிச் செல்லும் காட்சிகள் வெளியானது.
சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் TN 10 W 6521 எனும் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவு 1/5 @chennaipolice_ pic.twitter.com/kBd89I3jTK
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) July 1, 2023
தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவைகளை திருடுவது கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால் விலையேற்றம் காரணமாக தக்காளி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையெல்லாம் விட தற்போது பாலை திருடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி புகைப்படங்கள், வீடியோ அடங்கிய ஆதாரங்களை சென்னை போலீஸின் டிவிட்டர் பக்கத்திற்கு போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் TN 10 W 6521 எனும் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவு.
உப்பு, தண்ணீர், பால் இவற்றை எல்லாம் திருட மாட்டார்கள் என்கிற நிலை மாறி, கையில் எது கிடைத்தாலும் அதை திருடுகின்ற நிலைக்கு தற்போதைய சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விசயமாகும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பணியை சேவை சார்ந்த தொழிலாக கருதி உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லையென்றாலும் கூட மக்கள் நலப்பணியில் கனமழை பெருவெள்ளம் மூடுபனி என எதனையும் பொருட்படுத்தாமல் ஆண்டின் 365 நாட்களும் எந்தவிதமான சலிப்புமின்றி முழுமனநிறைவோடு ஈடுபட்டுவருகிறோம்.

இந்த வேளையில் பால் திருடர்களால் பால் முகவர்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்க அது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவு ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்தாலும் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருக்கும் நடைமுறைசிக்கல்களால் பெரும்பாலான பால் முகவர்களின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது கூடுதல் வேதனையளிக்கிறது.
எனவே பால் திருட்டில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட நபர்களை சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு அடையாளம் கண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் வலியுறுத்துகிறது . இவ்வாறு பொன்னுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications