இரவோடு இரவாக.. பல கோடி ஊழியர்களுக்கு அரசு தந்த அசத்தல் சர்ப்ரைஸ்.. மனசை குளிர வச்சிட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பு ஒன்று தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.

அதன்படி EPFO தளம் மொத்தமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள EPFO தளம் நிறைய குறைபாடுகளை கொண்டு உள்ளது. இதில் பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக EPFO தளத்தை மாற்றும் முடிவை எடுத்துள்ளனர். தளத்தை மாற்றுவதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.

epfo pf

பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது போன்ற பணிகளை எளிதாக்கும் விதமாக EPFO தளத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதோடு மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆனது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், அட்டவணை D ஐயும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது.

இப்போது திரும்பப் பெறக்கூடிய தொகையானது ஒரு உறுப்பினர் சேவையை முடித்த மாதங்கள் மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்தது.

முன்னதாக, திரும்பப் பெறும் பலன், முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் EPS பங்களிப்பு செலுத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதில் கட்டாய ஆறு மாத பங்களிப்பு சேவையும் அடங்கும். எனவே, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்கள் ஒரு வேலையில் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்களுக்கு பலன்கள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்காது. ஆனால் இனிமேல் அப்படி கிடையாது.

ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட withdrawal benefits கிடைக்கும். புதிய சட்டப்படி ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன.

7 லட்சம் பேருக்கு சந்தோசம்: ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை காலத்தை முடித்த பிறகு, உறுப்பினர்கள் withdrawal benefits பலனைப் பெறுவார்கள். ஆறு மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் பலன் பெற உரிமை இல்லை. கட்டாய சேவையை வழங்குவதற்கு முன்பு வெளியேறும் உறுப்பினர்களுக்கான withdrawal benefits கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு இதுவே காரணம். 2023-24 நிதியாண்டில், வேலை பார்த்த காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருப்பதால், withdrawal benefits பலன்களுக்கான சுமார் 7 லட்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன என்று அறிக்கை கூறியது.

இப்போது அந்த 7 லட்சம் பேர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இனி புதிய விதிப்படி ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட withdrawal benefits கிடைக்கும். புதிய சட்டப்படி ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+