விருதுநகருக்கு நல்ல காலம் பிறக்குது! சொந்த மாவட்டத்திற்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தங்கம்! 10 முக்கிய அறிவிப்புகள்
சென்னை: வேளச்சேரி மேம்பாலம் முதல் ஓசூர் டைடல் பார்க் அமைப்பது என்பது வரை தமிழக அரசின் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்துறை வேகமாக வளர்ச்சி பெறும். அது போல் விருதுநகருக்கு மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் அங்கு வேலைவாய்ப்பு பெருகும்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் கூறுகையில், "எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யத் தொடங்கினார்.

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
ஓசூருக்கு ஐடி பூங்கா
25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட, நவீன தமிழ்நாட்டின் சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஓசூரில் 5 இலட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளைக் கொண்டு, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மதுரை நூலகம்
தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்.
விமான நிலைய விரிவாக்கம்
முதுமை மானுட வாழ்வின் தவிர்க்க இயலாத கட்டமாகும். தனிமை, மருத்துவ நலன் மற்றும் பொருளாதாரச் சார்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும். இந்தப் பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேரப் பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கும்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய விழிப்புணர்வினையும், வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பையும் வழங்குவதன் மூலமே, அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதிசெய்திட முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்த உயர் நோக்கத்தினை முன்னிறுத்தி, ஓர் முன்னோடி முயற்சியாக மூன்றாம் பாலினத்தவரை, போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில், உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவரின் மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்குச் சமமான வகையில் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சி மூலம், மூன்றாம் பாலினத்தவர்களின் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு உறுதி செய்யப்படுவதுடன், அவர்கள் சமூக நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து வாழ்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
நிலப்பட்டா
ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன். சொந்த வீடற்ற / நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதுவரை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 இலட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்.
நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை. மற்றும் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.4 கி.மீ நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மொத்தம் 1,713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கும். மேலும், 48 கி.மீ. நீள மதுரை வெளிவட்டச் சாலை அமைத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
ஈஸியாகும் ஈசிஆர்
இவ்வாண்டு சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (TANSHA) மூலம் அமைக்கப்படும்.
செய்யார் தொழிற்பூங்கா
தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications