அமெரிக்காவில் பறை இசை! தமிழ் வாழும் தமிழ் வளரும் என்பதற்கு சாட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி
சென்னை: அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு பறை இசை முழங்க தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பால் நெகிழ்ந்து போய்விட்டார்.
தமிழ் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து அவர்கள் மத்தியில் எடுத்துக்கூறினார். பறை இசை வரவேற்பு பற்றி அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

''உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் நம் தமிழ் பறையிசையை கேட்டபோது மெய்சிலிர்த்தது. சியாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் மாணவர்கள் பறை இசைத்து மிகச்சிறப்பானதொரு வரவேற்பை கொடுத்தார்கள். "தமிழ் வரவேற்பு" வழங்கிய மாணவச் செல்வங்களுக்கும், தமிழ்ச் சொந்தங்களுக்கும் அன்பும், நன்றியும்.
மாணவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக்கல்வித் திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்நாடு மீதும், தமிழின் மீதும் பற்றுள்ள மாணவர்கள் ஞாயிறுதோறும் சிறப்பு தமிழ் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். தன்னார்வலர்கள் பலர் இணைந்து வாரம்தோறும் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார்கள்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தமிழ் வாழும்! தமிழ் வளரும்! என்பதற்கான சாட்சியாக அமைந்துள்ளது. இம்முயற்சிக்கு உறுதுணையாக விளங்கும் சியாட்டில் தமிழ் அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.''
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications