"மாபெரும் முறைகேடு!" நீட் எழுதியது வெறும் 3500 பேர் தான்! ஆனால் பாஸ் ஆனது 88,000 பேர்- அன்பில் மகேஷ்
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த காலங்களில் நீட் தேர்வில் முறைகேடும் நடந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான தீர்மானத்தையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள போதிலும் அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனைச் சென்னை கலைவானர் அரங்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்பில் மகேஷ்: அதேபோல திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், "நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் அனைவரும் ஒன்றாகப் போராட வேண்டும்.. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாகப் போராடினால் மட்டுமே நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும்.. அனைவரும் சமம் என்று தான் திராவிட இயக்கங்கள் அனைவருக்கும் சீருடைகளை வழங்கி பள்ளிக்குச் செல்ல வலியுறுத்தியது" என்று அவர் தெரிவித்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் என்று தமிழ்நாடு உரிமைகளை மீட்டெடுப்பதில் திராவிட இயக்கம் தான் முதலில் குரல் கொடுக்கும். நீட் விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கமாக என்று நீட் விலக்கு பெறச் சட்ட போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகிறோம். நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம்.
ஈகோ மோதல்: இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது 15 மாதத்தில் நிச்சயம் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம்.. அதேபோல நீட் விலக்கையும் நிச்சயம் பெறுவோம். ஆளுநர் மாளிகைக்கு இந்த நீட் விவகாரத்தில் தனி தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோம்.
ஆனால், அது அங்கேயே தூங்கிக் கொண்டு இருந்தது. அழுத்தம் கொடுத்த பிறகே அதை அனுப்பினார். இது ஒன்றும் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள ஈகோ மோதல் இல்லை. இது பல லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவு. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இப்போது இருக்கும் மத்திய அரசு நமது பக்கம் இல்லை. இந்த வேதனையும் பாரமும் இருக்கவே செய்கிறது. மத்திய அரசு நமக்கான அரசாக அமையும் போது நிச்சயம் நாம் சொல்லும் நியாயமான விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்பார்கள். இந்த நீட் விலக்கில் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். முதல்வர் கூறியது போல இது ஒரு பலி பீடம்.. இந்த நீட் தேர்வால் மாணவர்கள் மரணத்திற்கும் சிறைச்சாலைகளுக்கும் செல்கிறார்கள்.
முறைகேடு: திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வை எழுதியதே 3700 பேர் தான்.. ஆனால் 88 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னார்கள். கேட்டால் அச்சுப் பிழை என்றார்கள். உத்தரகண்ட்டிலும் இதேபோலே தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னார்கள்.
மேலும், நீட் தேர்வு எழுதச் சென்ற குழந்தைகளின் உடைகளைக் கிழித்தார்கள்.. சோதனை என்ற பெயரில் மாணவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் எனப் பார்த்தோம்.. ஆனால் புதிய ஆடைகளைக் கொடுத்து பள்ளிக் கூடத்திற்குச் செல்லுங்கள் என்றதே திராவிட மாடல் அரசு" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications