காலை சிற்றுண்டிக்காக அரசு பள்ளி நேரம் மாற்றியமைப்பா?.. அமைச்சர் அன்பில் விளக்கம்
சென்னை: காலை சிற்றுண்டிக்காக அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
படிக்கும் பிள்ளைகள் வெறும் வயிற்றுடன் பள்ளியில் படிக்கக் கூடாது என்பதற்காகத்தான் மதிய உணவு திட்டமும் சத்துணவு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாகும்.
தமிழகத்தை பார்த்து மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டது. அந்த அளவுக்கு வெற்றி பெற்ற இந்த திட்டத்தில் கூடுதல் அம்சங்களை அவ்வப்போது வரும் ஆட்சியாளர்கள் சேர்த்து கொண்டே வருவார்கள்.

முட்டை
அந்த வகையில் முட்டை, சுண்டல் பயறு தொடங்கி தற்போது தேங்காய் துண்டை சத்துணவில் சேர்க்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 7ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
அதில் முக்கியமானது சென்னை மாநகராட்சி காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டமாகும். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

காலை சிற்றுண்டி திட்டம்
இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்த திட்டம் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். காலை சிற்றுண்டி எனும் போது காலை வேளைகளில் அரசு பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
Recommended Video

அன்பில் மகேஷ்
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications