Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதுவுமே சரியில்லை.. சந்திரபிரியங்காவின் பதவியை பறித்த முதல்வர் ரங்கசாமி.. மவுனம் கலைத்த சபாநாயகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். தன்மீது சாதி, பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாக கூறி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் சந்திரபிரியங்கா. அதில் உண்மையில்லை என்றும் சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவியை முதல்வர் ரங்கசாமி பறித்து விட்டதாகவும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார் சபாநாயகர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவான சந்திர பிரியங்கா. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்திருந்த இவர், சாதி மற்றும் பாலின ரீதியில் தாக்கப்படுவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

Minister Chandra Priyanka removed from cabinet before 3 days says Speaker Selvam

சந்திரபிரியங்கா வைத்த குற்றச்சாட்டுகள் புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் சந்திரபிரியங்கா ராஜினாமா செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்காவின் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

போக்குவரத்துறையில் எந்த ஒரு பணிகளும் சரிவர நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பொதுமக்கள் பலரும் அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவைப் பற்றிய புகார் கூறினர். அவரது இலாகா செயல்பாடுகள் பற்றி முதல்வர் ரங்கசாமிக்கு திருப்தி இல்லை. இரண்டரை ஆண்டு காலம் கடந்த பின்னரும் எந்த பணிகளையும் செய்யவில்லை. அவரது பணியை சரியாக செய்யவில்லை என்றுதான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தலித் என்பதால் புறக்கப்பட்டதாக சந்திரபிரியங்கா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதற்கு, எப்போதுமே முதல்வர் ரங்கசாமி ஜாதி பேதம் பார்க்கமாட்டார். தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதி உள்ளது ஒரே ஒரு தலித் அமைச்சர்தான் இருக்கிறார். புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதி உள்ளது 2 தலித் அமைச்சர்கள் இருப்பதாகவும் சபாநாயகர் கூறினார். தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். துணை சபாநாயர், இரண்டு அமைச்சர்கள் என தலித் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறினார் சபாநாயகர் செல்வம்.

சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அரசாணை விரைவில் துணை நிலை ஆளுநரால் வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.

இதனிடையே சந்திரபிரியங்கா நீக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என புதுச்சேரி அமைச்சர் தெரிவித்துள்ளார். யார் நியமிக்கின்றனரோ அவர்களுக்கு பதவியை எடுக்கவும் அதிகாரம் உள்ளது எனவும் லெட்சுமி நாராயணன் பேட்டியளித்துள்ளார். முதலமைச்சருக்கு கொடுத்துள்ள அரசியல் உரிமையை கேள்வி கேட்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் அதற்காக நான் வருத்தமைடைவேன். சகோதரி சந்திர பிரியங்கா அவரின் பிரச்னைகள் குறித்து பெண் துணைநிலை ஆளுநரான என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒருநாளும் என்னிடம் அவர் எதையும் சொன்னதில்லை. பெண் அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே, முதலமைச்சர் அவர்கள் சந்திர பிரியங்காவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சர் சந்திர பிரியங்காவின் நடவடிக்கைகளில் தொய்வு இருப்பதாக நினைத்த முதல்வர் அவர்கள், அப்போதே சில நடவடிக்கைகளை எடுக்க விரும்பினார். அப்போது முதல்வர் அவர்களிடம், 'நம்மிடம் இருப்பது ஒரு பெண் அமைச்சர். மேலும் அவரிடம் போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடம் நலத்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இருக்கின்றன.

Minister Chandra Priyanka removed from cabinet before 3 days says Speaker Selvam

அதனால் அவரை அழைத்துப் பேசி பணியாற்ற வையுங்கள்' என்று சொன்னேன். ஆனால் மறுபடியும் முதல்வர் அவர்கள் அமைச்சர் சந்திர பிரியங்காவின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால் அவர் ராஜினாமா முதலில் கிடையாது. அதற்கு முன்பே அவரின் பணி திருப்தியாக இல்லை என்ற காரணத்தினால் முதல்வர், அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூறியிருந்தார். அதனை உறுதி செய்யும் வகையில், சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் சந்திரபிரியங்காவின் பதவியை பறித்த ரங்கசாமி அதற்கான கோப்புகளை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தார். அந்த கோப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கையெழுத்தாகி வந்து விட்டது. இதனை அறிந்துதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சந்திரபிரியங்கா அறிவிப்பு வெளியிட்டார். அவரது புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதே புதுச்சேரி அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+