மாதம் 20 வாகனங்களை சீஸ் செய்யனும்! கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த துரைமுருகன்!
சென்னை: சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
மேலும் அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்களையாவது கைப்பற்றி, அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துச்செல்லும் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டுமென கறாராக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட் அண்ட் ரைட்டாக துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுரங்கத்துறை
சுரங்கத்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் எனவும், பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் எனவும் அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கினார்.

சட்ட விரோதமாக
சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.

அரசு புறம்போக்கு நிலம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்குக் கொண்டு வருமாறு கூறிய அமைச்சர் துரைமுருகன், அனைத்து மாவட்டங்களிலும் தகுதி வாய்ந்த கல்குவாரிகளை உரிய ஏலத்திற்கு கொண்டு வந்து கனிம வருவாயினை ஈட்டவும் பொது மக்களுக்கு கட்டுமான பொருட்களை நியமான விலையில் கிடைக்க வழிவகை செய்யவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

20 வாகனங்கள்
வாகனம் கைப்பற்றுகையை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்த பட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும், அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லும் மணல் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications