Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் ஒன்று கூடாவிட்டால் மீண்டும் காட்டுமிராண்டியாக கூடும்.. துரைமுருகன் எதை சொல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் ஒன்று கூடாவிட்டால் மீண்டும் காட்டுமிராண்டியாக, அறிவில்லாதவனாக வாழ நேரிடும், நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள். தற்போது இருக்கக்கூடிய சூழலை மீட்டெடுக்காவிட்டால் (history repeats it self)வரலாறு மீண்டும் நடக்கும் என பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினர்.

Recommended Video

    நாம் ஒன்று கூடாவிட்டால் மீண்டும் காட்டுமிராண்டியாக கூடும்.. துரைமுருகன் எதை சொல்கிறார்?

    சென்னை பெரியார் திடலில், மறைந்த பேராசிரியர், முன்னாள் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா, திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன் பேசுகையில், ஒருமுறை பேராசிரியர் க அன்பழகனிடம் பெரியார் வாழ்ந்த நாட்களை விட ஒரு வாரம் அதிகமாக தற்போது உங்கள் வாழ்நாள் உள்ளது என பேசிக் கொண்டபோது, பெரியார் வயதை தாண்டி வாழ்வது பெருமை இல்லை, பெரியாரால் வாழ்கிறோம் என்பதில் தான் பெருமை என்றார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் க அன்பழகன் என அனைவரையும் பெரியார் உருவாக்கினார். அதுபோல எத்தனை கலைஞரை, பேராசிரியர்களை நாம் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்றார். அது போல் இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் விழாவிற்கு வருவதற்கு சற்றுமுன் சிறிய விபத்து ஏற்பட்டது.

    மூக்கு கண்ணாடி

    மூக்கு கண்ணாடி

    எங்கே இந்த விழாவிற்கு, வரமுடியாத சூழல் ஏற்படுமோ என்று நினைத்தேன். நல்லவேளை மூக்கு கண்ணாடியோடு போனது. விழாவிற்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று வந்துள்ளேன். நாங்கள் ஓட்டும் கேட்போம், மாரியம்மனுக்கு கூழும் ஊற்றுவோம். ஓட்டு கேட்பதால் அனைவரையும் கும்பிடுவோம். ஆனால் நீங்கள் (தி.க) அனைவரையும் விமர்சிக்கிறீர்கள். இதனால் தான் எங்களால் அனைத்தை உரிமைகளையும் கேட்டு வாங்க முடிகிறது.

    நகைச்சுவை பண்பு

    நகைச்சுவை பண்பு

    கட்சி விட்டு கட்சி மாறுபவர்கள் சீட்டுக்கு ஆசைப்படுவர்கள், பெரியார் பற்றி பயிலாதவர்வாகள், அவர்களுக்கு கொள்கை கிடையாது. ஒருமுறை என்னை பார்த்து, என்னையா உனக்கு முடி கொட்டுது என பேராசியர் கேட்டார். அதற்கு நான் அறிவு வளர்வதால் முடி கொட்டுது என்றேன். அது சரி உனக்கு ஏன் முடி கொட்டுது என்று பேராசிரியருக்குள் இருந்த நகைச்சுவை பண்பை நினைவு கூர்ந்தார்.

    சட்டசபையில் ஜெயலலிதா

    சட்டசபையில் ஜெயலலிதா

    சட்டசபையில் ஜெயலலிதாவையே கதிகலங்க செய்தவர் சாட்டை பேச்சு என்பார்கள் அது அவர் பேச்சில் உண்டு. பேராசிரியர்போல் அரசியலில் பயமில்லாதவரை பார்க்க முடியாது. அஞ்சா நெஞ்சம் கொண்டவர்,
    பெரியார், அண்ணா, கலைஞர், தற்போது ஸ்டாலின் என நான்கு தலைமுறை கண்டவர் பேராசியர். அமெரிக்காவிற்கு எப்படி நாசா'வோ அதுபோல தமிழகத்திற்கு திராவிடர் கழகம் வேண்டும்.

    வரலாறு மீண்டும் நடக்கும்

    வரலாறு மீண்டும் நடக்கும்

    பேராசிரியர் ஒரு நாள் என்னிடம் நீ கூட திமுக வின் பொது செயலாளராக வரலாம் என்றார் அவரின் வாக்கு பலித்தது என உணர்வு பூர்வமாக கூறினார். நாம் ஒன்று கூடாவிட்டால் மீண்டும் காட்டுமிராண்டியாக அறிவில்லாதவனாக வாழ நேரிடும், நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள் இப்ப இருக்கக்கூடிய சூழலை மீட்காவிட்டால் (history repeats itself)வரலாறு மீண்டும் நடக்கும் என்றார்.

    பேராசிரியர் பிறந்தநாள் உரை

    பேராசிரியர் பிறந்தநாள் உரை


    இந்த நிலையில் கீ.வீரமணி பேசுகையில், திராவிடர் கழகத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி இரண்டு முக்கிய தருணங்களை கொண்டது ஒன்று, பேராசிரியர் பிறந்தநாள் மற்றொன்று தந்தை பெரியாரின் கடைசி உரை, பெரியார் தன் உரையை முடிக்கிறார் பேராசிரியர் பிறக்கிறார், இதனால் என்னவென்றால் திராவிடர் கழகம் தொய்வில்லாமல் இருக்கிறது நடக்கிறது என்பதுதான்,
    தமிழர் என்பதால் பெருமை படுகிறேன் திராவிடர் என்பதால் உரிமை படுகிறேன் என்றவர் பேராசிரியர்.

    உறவுக்கு கை கொடுப்பது

    உறவுக்கு கை கொடுப்பது

    திராவிடம் என்பது உறவுக்கு கை கொடுப்பது உரிமைக்கு குரல் கொடுப்பது. இரட்டை குழல் துப்பாக்கியாக உள்ளதுதான் திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்ற கழகம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கமுடியாதுன்னு சொன்னார்கள் கடைசியில் நீதிமன்றம் சென்றதில் அதில் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார்கள் அதுபோதும் உடனே சட்டம் போடப்பட்டது, இதுபோல அடிக்கடி சொல்லுங்கள் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+