இரவு 11 மணிக்கு வந்த போன்! முதல்வர் தூங்குவதே கிடையாது! எ.வ.வேலு பகிர்ந்த ருசிகரத் தகவல்!
சென்னை: மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு போன் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை திருக்குறள் புத்தகத்தில் 949வது திருக்குறளை படிக்குமாறு கூறிய நிகழ்வை மேடையில் பகிர்ந்துகொண்டார் அமைச்சர் எ.வ.வேலு.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தூங்குவதே கிடையாது என்றும் இந்தியாவிலேயே இவரை போல் வேறு எந்த முதலமைச்சரும் இவ்வளவு நேரம் விழித்திருக்க மாட்டார்கள் எனவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். அப்போது குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது தூங்குகிறார், எப்போது விழித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது எனத் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு தன்னை அழைத்த முதல்வர் ஸ்டாலின், என்ன தூங்கிவிட்டீர்களா என வினவியதாகவும், தூங்கவில்லை எனக் கூறியதை அடுத்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து 949வது திருக்குறளை படியுங்கள் என தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
எப்போதுமே தனது அறையில் கருணாநிதி விளக்கவுரை எழுதிய திருக்குறள் புத்தகம் இருக்கும் என்பதால், தானும் அதனை உடனே எடுத்து படித்ததாகவும், அதனை கருணாநிதி சிலைக்கு கீழே தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்க வேண்டும் என தனக்கு இரவு 11 மணிக்கு முதல்வர் உத்தரவு போட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் மருத்துவமனை வளாகத்தை தாம் பார்வையிட வந்துவிட்டு கார் ஏறச் சென்ற போது, தனது காதுபடவே ஹாஸ்பிடல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு என ஹாஸ்பிடலை சுற்றியுள்ள பகுதி மக்கள் பேசியதாகவும் கூறினார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications