ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு திட்டம் எப்படி வந்தது? - ருசிகரமான நினைவை பகிர்ந்த அமைச்சர்!
சென்னை : ரேஷன் கடைகளில் மானிய விலையில் பருப்புகள் வழங்கப்படும் திட்டம் எப்படி உருவானது என்பது பற்றி ருசிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், மானிய விலையில், அத்தியாவசிய தேவையான பருப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது உணவுத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவிடம், முதல்வராக இருந்த கருணாநிதி கேட்ட கேள்வி தான், சிறப்பான திட்டமாக உருவானது என நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
விளிம்பு நிலை மக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரத்துக்கான திட்டமான மானிய விலையில் சமையல் பொருட்கள் வழங்கும் திட்டம் உருவான விதத்தை அமைச்சர் எ.வ.வேலு பகிர்ந்துகொண்டுள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் "கலைஞர் - இதய அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

போன் போட்ட கருணாநிதி
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "2007ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விலைவாசி அதிகமாக இருந்தது. நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒருநாள் காலை 6.30 மணிக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எனக்கு போன் செய்தார். நாளிதழ் பார்த்தியா என கேட்டார். அப்போது நான் 13வது பக்கம் பார்த்தேன் என சொன்னேன். என்ன செய்தி எனக் கேட்டார். துவரம் பருப்பு விலை ரூபாய் 65 ஆக அதிகரித்துவிட்டது என சொன்னேன்.

துவரம் பருப்பு விலை
உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை உணராமல், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். திரும்ப சென்னை வந்ததும் அதனை சரி செய்ய முயல்கிறேன் என்று சொன்னேன். அப்போது நான் துறை சார்ந்த செயலாளரிடம் கேட்டேன், ஒரு முதலமைச்சர் என்னிடம் பருப்பு விலை என்ன என்று கேட்கிறார், எத்தகைய முதல்வராக இருக்கிறார் பாருங்கள் என சொன்னேன்.

சென்னை வந்ததுமே
உடனடியாக சென்னை வந்ததும், துறை சார்ந்த செயலாளர் ஒருவரை கொண்டு நிதித்துறை அதிகாரி ஒருவரையும் அழைத்து, வருடத்திற்கு நாம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை கொடுத்தால் எவ்வளவு செலவாகும் என கேட்டறிந்த போது அவர்கள் 300 கோடி ரூபாய் ஆகும் என சொன்னார்கள். அதை கருணாநிதியிடம் தெரிவித்தேன்.

இன்றைய நிலைக்கு காரணம்
அப்போது கருணாநிதி என்னிடம், நீ ஒரு கிலோ பருப்புக்கு என்ன விலை நிர்ணயம் செய்து இருக்கிறாய் என்று கேட்டார். நான் 40 ரூபாய் எனச் சொன்னேன், அப்போது கருணாநிதி என்னிடம், "நான் சொல்கிறேன், 30 ரூபாய்க்கு அதனைக் கொடு" என்றார். 300 கோடி இழப்பு எனக்கு பெரும் விஷயம் அல்ல, எல்லோருடைய வீட்டிலும் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தது தான், இன்று நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலைக்கு கிடைக்கக் காரணம்" எனத் தெரிவித்தார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications