அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை.. பயனாளிகளின் வீடுகளுக்கு பறந்த தபால்! கீதா ஜீவனின் அடடே ஐடியா!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது. குறிப்பாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்களை கவர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் மாவட்டங்களில் பிரபலமான அமைச்சரான கீதா ஜீவன் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வைத்து ஆதரவு திரட்டி வருகிறார். ஒவ்வொரு வீட்டுக்கும் தபால் அனுப்பி ஆதரவு கேட்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருந்தபோதிலும் தற்போதே அதிமுகவும் திமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. திமுக ஆதரவு அலை தமிழகத்தில் வீசும் நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரமாக செயலாற்றுகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
ஓர் அணியில் தமிழ்நாடு, ஒன்-டூ-ஒன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் சந்தித்து வருகிறார். அதே நேரத்தில் திமுகவின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பல தங்கள் பகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

திமுக பிரச்சாரம்
பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் என நிர்வாகிகளை தொண்டர்களை சந்திப்பது, தீபாவளி பரிசு, திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது என வாக்காளர்களை சந்திப்பது என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் திமுகவின் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் தென் மாவட்டங்களில் முக்கியமான அமைச்சரான கீதா ஜீவனும் தனது தூத்துக்குடி பகுதியில் வித்தியாசமாக ஆதரவு திரட்டி வருகிறார். தமிழக அரசை பொறுத்தவரை இதுவரை செயல்படுத்திய நலத்திட்டங்களில், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
மகளிர் உரிமைத் தொகை
தற்போது இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனாளிகள் பயன்பெற்று வரும் நிலையில் தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக உங்களது ஸ்டாலின் முகாம்களில் மனுக்கள் பெறப்பட்டு தற்போது கள ஆய்வு தொடங்கி இருக்கிறது. டிசம்பர் 15ஆம் தேதி அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத நிலை இந்த ஆண்டு தொகை கிடைக்குமா என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கீதா ஜீவன்
தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் அனைவருக்கும் இந்த திட்டம் போய் சேரும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தனது பகுதியில் அதை வைத்து ஆதரவு திரட்டி வருகிறார் அமைச்சரும் தூத்துக்குடி எம்எல்ஏவுமான கீதா ஜீவன்.
மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை திட்டத்தை நினைவூட்டி தனது சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெண் வாக்காளர்களின் வீடுகளுக்கு தபால் ஒன்றை அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த தபாலில்," அனைவருக்கும் அனைத்து திட்டங்களையும் சென்று சேரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது.
2026 தேர்தல்
குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வலிமையை வழங்கி வாழ்வில் ஒளி ஏற்றும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் நீங்கள் பயன் பெற்று வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இதேபோல தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்து ஸ்டாலினின் ஆட்சியை தொடர செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கீதா ஜீவனின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் பிற அமைச்சர்களும் இதே பாணியை பின்பற்ற திட்டமிட்டுள்ளனராம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications